இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள பெண் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சிப் பட்டறைகள் இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பினால், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், இலங்கை முஸ்லிம் ஊடக போரம் மற்றும் யாழ் பத்திரிகைக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படுகின்றன
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய நகரங்களில் ஒக்டோபர்–நவம்பர் மாதங்களில் நேரடியாக நடைபெறவுள்ள இந்த ஒரு நாள் முழுநேரப் பயிற்சிப் பட்டறைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இதனுடன் இணையவழி தொடர்ச்சியான அமர்வுகளும் நடைபெறும்.
செயற்கை நுண்ணறிவு உதவியுடன் செய்தி அறிக்கையிடல் மற்றும் அது தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தும் திறனையும், அதேவேளை செயற்கை நுண்ணறிவு தவறாகவும் தீங்கிழைக்கும் வகையிலும் பயன்படுத்தப்படுவதற்கு எதிரான வலுவான பாதுகாப்பு முறைகளை உருவாக்கும் திறனையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
பயிற்சிகளில் கோட்பாட்டு அறிவுடன் நடைமுறைப் பயிற்சிகளும் இடம்பெறும். செயற்கை நுண்ணறிவின் அடிப்படைக் கருத்துக்கள், நடைமுறை செயற்கை நுண்ணறிவு கருவிகள், தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பாலின அடிப்படையிலான வன்முறையை (TFGBV) அடையாளம் கண்டு எதிர்கொள்வது, டிஜிட்டல் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவை நெறிமுறையுடன் பயன்படுத்துதல் மற்றும் வலியுறுத்தல் (advocacy) நடவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு கருவிகளை நெறிமுறையுடன் பயன்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாகும் அச்சுறுத்தல்களை அடையாளம் காணுதல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்துதல் போன்ற நடைமுறைத் திறன்களையும் பங்கேற்பாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
இந்தப் பயிற்சிப் பட்டறைகளை கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ நடத்தவுள்ளார். இவர் செல்வாக்கு நடவடிக்கைகள் (influence operations), தவறான தகவல் பரவல் (disinformation) மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணராவார்.
"இந்த முயற்சியின் மூலம் பெண் ஊடகவியலாளர்கள்,சிவில் அமைப்பினர், உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், நவீன செய்தி அறைகள் மற்றும் வலியுறுத்தல் திட்டங்களில் தலைமைத்துவம் வகிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவைப் பெறுவதுடன், வேகமாக மாற்றமடைந்து வரும் டிஜிட்டல் சூழலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான கருவிகளையும் பெற்றுக்கொள்வார்கள்,” என இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பின் திட்ட பொறுப்பாளரும் அறங்காவலருமான ஷார்மினி போயில் தெரிவித்தார்.
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்கள் 2026 செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்:
https://www.sawmsrilanka.org/ai-training-2026
ஒவ்வொரு பயிற்சிப் பட்டறையிலும் 25 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பயிற்சிப் பட்டறை அட்டவணை
13 ஒக்டோபர் 2026 — கொழும்பு (சிங்களம்)
20 ஒக்டோபர் 2026 — யாழ்ப்பாணம் (தமிழ்)
27 ஒக்டோபர் 2026 — கண்டி (சிங்களம்)
3 நவம்பர் 2026 — புத்தளம் (சிங்களம்/தமிழ்)
10 நவம்பர் 2026 — கொழும்பு (ஆங்கிலம்)
“பெண்கள், ஊடகம் மற்றும் சிவில் சமூகத்தை வலுப்படுத்தும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் சமத்துவம் "என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவூட்டல் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு Canada Fund for Local Initiatives (CFLI) ஆதரவு வழங்குகிறது.
இலங்கை தெற்காசிய பெண்கள் ஊடக அமைப்பானது 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது சுயாதீனமான, அரசியல் சார்பற்ற வலையமைப்பாகும். நாடு முழுவதும் ஊடகச் சுதந்திரம், செய்தி அறைகளில் பாலின சமத்துவம் மற்றும் பெண் ஊடகவியலாளர்களின் தொழில்முறை முன்னேற்றம் ஆகியவற்றை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.
மேலதிக தகவல்களுக்கு: sawmsrilanka@gmail.com






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM