அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் ஏற்பாட்டில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான தெலுங்கு மொழிப் பயிற்சி பட்டறை பத்தாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (30) இனிதே நிறைவு கண்டது.
கொழும்பு-14 ஸ்ரேஸ் வீதியில் அமைந்துள்ள மினி அப்பலோ வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையின் இறுதி நாள் நிகழ்வு மேற்படி வைத்திய சாலையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் W.U.நாயுடு தலைமையில் நடைபெற்றது
இதில் அகில் இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம்.அன்பழகன் மற்றும் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பயிற்சிகளை வழங்கிய ஆந்திராவில் இருந்து வருகை தந்த சுரவரம் பிரதப்ரெட்டி தெலுங்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தெலுங்கு தொண்டர் ஆசிரியர் ஏரா நாயுடு ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்தி கெளரவமும் வழங்கப்பட்டது.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM