மேஷம்
விடாமுயற்சியும் பேரன்பும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து வந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது சுகஸ்தானத்திற்கு 13-11-2026 முதல் அமர்கிறார்கள். அத்துடன் ஒன்றரை ஆண்டு காலம் வரை உங்களின் வாழ்வை வளம் பெற செய்கிறார்கள்.
இதுவரை ஐந்தாமிடத்தில் கேது அமர்ந்து பல்வேறு தடைகளை செய்து, எதையும் நடக்காமல் தடுத்து வந்தார். இனி பெயர்ச்சிக்கு பின்பு நான்கில் அமர்வது தெளிவான மனநிலையும், பொருளாதார வளமும் பெறுவீர்கள். ஆறு மாத காலம் வரை குருவும் கேது இணைவு பெறுவது பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை பெற்று தரும். கேதுவின் பார்வையால் தனஸ்தானம் பலம் பெறுவதும், எதிர்பாராத மேன்மையும் உண்டாகும்.
ஆறாமிடத்தை பார்வை இடுவது மருத்துவ ரீதியான சிகிச்சை மூலம் விரைவில் குணமடையவும் மருத்துவம் செய்ய வேண்டிய அவசியமில்லாத நிலையும் பெறுவீர்கள். சுகஸ்தானத்தில் கேது அமர்வது பூசத்தில் கேது அமரும் போது சில சவால்களை சந்திக்க வேண்டி வரும். எதையும் போராடி பெற வேண்டிய நிலைகள் வரலாம். எட்டு மாதம் தேவையற்ற வம்புகளை தவிர்த்து கொள்வது நல்லது. எதையும் யோசித்து நிதானமுடன் செய்வது நல்லது.
இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த ராகு இனிமேல் தொழில் ஸ்தானத்தில் அமர்வது உத்தியோகத்தில் இருப்பவருக்கு இடமாற்றம் உண்டாகும்.
தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். ராகு விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதால் வெளிநாடு செல்ல விரும்பும் அன்பர்கள் வெளிநாடு செல்ல நல்லதொரு வாய்ப்பு கிட்டும். அவிட்டத்தில் ராகு இருக்கும் வரையில் சுமாரான பலனும் திருவோணத்தில் அமரும் போது நல்ல வேலையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
சிலருக்கு அதிகாரத்தில் அமரும் வாய்ப்புகளும் கிட்டும். தொடர்ந்து உத்திராடத்தில் ராகு அமரும் போது எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு செயல்படும் பக்குவம் உண்டாகும். ராகு தொழில் ஸ்தானத்தில் அமரும் போது பணியில் இருந்தாலும் வேறு தொழிலில் ஆர்வம் செலுத்தி பணபுழக்கத்தை உருவாக்கி கொள்வீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
எட்டாமிட பார்வை ராகுவுக்கு சில சிக்கல்களை கொடுக்கும் என்பதால் எதிரிடம் கவனமாக இருப்பது நல்லது. எது சரியோ அதை மட்டும் செய்து கொள்வது நன்மையாக அமையும்.
பரிகாரம்
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையம்மன் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்வதும் வியாழன் அன்று விநாயகர் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி வேண்டுவதும் உங்களின் தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
ரிஷபம்
திடமான நம்பிக்கையும் உறுதியும் கொண்டு விளங்கும் ரிஷப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்து ராகு இனி பாக்கிய ஸ்தானத்திலும், சுகஸ்தானத்தில் இருந்த கேது மூன்றாமிடத்தில் அமர்ந்து, ஓன்றரை ஆண்டுகள் பலன் தருவார்கள். முயற்சி ஸ்தானத்தில் கேது அவர்வது யோக பலன்களை பெற்று தரும். வரும் 13-11-2026 முதலான ராகு / கேது பெயர்ச்சி நற்பலனாக அமையும்.
மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து ராசியை பார்வை இடுவது எடுத்த காரியம் வெற்றி பெறும் வரை உங்களின் முயற்சியை கைவிட மாட்டீர்கள். முதலில் கேது குருவுடன் ஆறு மாதங்கள் இணைவு பெறுவது சிறப்பான பலன்களை பெற்று தரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் தரும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள்.
பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது சற்று கவனமுடன் எட்டு மாத காலங்கள் இருக்க வேண்டிவரும். காரணமில்லாத வம்பு வழக்கு வந்து சேரும். காரிய தடைகள் உண்டாகும்.
எதையும் சவாலாக சந்திக்க வேண்டிவரும் இருப்பினும் உங்களின் மனவலிமையாலும் ராசிநாதன் சுக்கிரனின் அருள் பார்வையாலும் சில விடயங்களை சரி செய்து கொள்வீர்கள். தீர்த்த யாத்திரை செல்லுதல் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெறுதல் போன்ற பலன்களை பெறுவீர்கள். யாருக்கும் கெடுதல் நினைக்காத உங்களுக்கு கேடு இல்லை நன்மையே உண்டாகும்.
இதுவரை தொழில் ஸ்தானத்தில் இருந்த ராகு இனி பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் லாபஸ்தானத்தை பார்வை இடுவதும் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியையும் தொழில் முன்னேற்றமும் காண்பீர்கள். தந்தை வழி சொத்துகள் சார்ந்த பிரச்சனைகளில் நல்ல தீர்வு உண்டாகும்.
வரவுக்கு மீறிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அவிட்டத்தில் ராகு அமரும் போது சகோதரர்களிடம் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். திருவோணத்தில் ராகு அமரும் போது வரவேண்டிய தொகைகள் வந்து சேரும். சேமிப்புக்கு வழிவகுக்கும். கிடைத்த தொகையில் இடம் மனை வாங்கி போடுவீர்கள். உத்திராடத்தில் ராகு அமர உத்தியோகத்தில் உள்ளவருக்கு சில தடைகள் மற்றும் சிரமங்கள் உண்டாகும்.
எதையும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கருத்து ஒற்றுமைகள் நிலவுவது கஷ்டமாக அமையும். சிலருக்கு புதிய சேர்க்கை நண்பர்களின் தொடர்புகள் வெறுப்பு உணர்வுகளை பெற்று தரும். பணியில் இருப்பவருக்கு கவன குறைவு உண்டாகும். கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுக்கு கெடுதலை காட்டிலும் நன்மையே நல்லபடியாக அமையும். பொருளாதார கஷ்டம் வராது.
பரிகாரம்
நவகிரக ராகு / கேதுவுக்கு ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றி செவ்வரளி பூ வைத்து புளியன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் சிறப்பாக அமையும். தடையின்றி காரியம் சித்தியாகும்.
மிதுனம்
சாதுர்யமாக பேசி எந்த காரியத்தையும் சாதிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை பாக்கிய ஸ்தானத்தில் இருந்த ராகு அட்டம ஸ்தானத்திலும், மூன்றில் இருந்த கேது தனஸ்தானத்திலும் வரும் 13-11-20026 முதல் செயல்படுவார்கள். அட்டமஸ்தானத்தில் ராகு பல சிரமங்களை தந்தாலும் கேதுவின் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள். சரியான நேரத்தில் உங்களின் முயற்சி வெற்றியை பெற்று தரும்.
தனஸ்தானத்தில் கேது ஆயில்யத்தில் குருவுடன் இணைவு பெறுவது பொருளாதாரத்தில் மேன்மையையும் உத்தியோகத்தில் சம்பள உயர்வும் பெறுவீர்கள். வேலையின்றி இருந்தவருக்கு நல்ல வேலை கிடைக்கும். இதுவரை யோசித்து கொண்டிருந்த சில காரியம் செயல்படதுவங்கும் பொதுவாக கேது இரண்டில் இருந்தால் திருமண தடை காரியத் தடைகளை உண்டு பண்ணுவார்.
குருவுடன் இணைவதால் நல்ல பலனை பெற்று தரும். சனி நட்சத்திரமான பூசத்தில் கேது பயணம் செய்யும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உழைப்பு இருக்கும்.
ஆனால் அதற்கு தகுந்த பலன்கள் இருக்காது. எதையும் போராடி பெற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கைகள் கிடைக்கும். உறவுகளில் சிலருக்கு விரிசல் உண்டாகும். கருத்து ஒற்றுமை இருக்காது. நேர்மை சில நேரம் கைகொடுக்காது. ஒன்றறை வருடம் பாதி கஷ்டமும் பாதி நன்மையும் உண்டாகும். விட்டு கொடுத்தால் எல்லாம் நன்மையே விளையும்.
இதுவரை ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் வரை நல்ல பலன்கள் அமைய பெற்றீர்கள். பதவி உயர்வு, பண பயன் கிடைக்கப் பெற்றீர்கள். அட்டம ஸ்தானத்தில் ராகு பல தடைகளை தந்து பலன்களை தாமதப்படுத்துவார். உங்களுடன் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் பலன் கிடைக்கும் போது எல்லாம் சரியான இருந்தாலும் தடைபடுவது மனதில் வருத்தத்தை உண்டாக்கும்.
திருமணம் பேசி முடியும் தருவாயில் சிறு பிரச்சனையால் தடைபட்டு விடும் இதற்கு கலங்க வேண்டாம் வழிபாடு மூலம் சரி செய்து விடலாம். ராகு மூன்றாம் பார்வையாக ஆறாமிடத்தை பார்வை இடுவது உடல் நலனின் ஆரோக்கிய குறைபாடு, வைத்தியம் செய்து சரி செய்து கொள்வீர்கள். அனைத்து பரிசோதனையிலும் ஒன்றுமில்லை என்றாலும் கூட உடல் பலவீனமாகவே இருக்கும் இருப்பினும் மருத்துவத்தால் சரி செய்து கொள்வீர்கள்.
தொழில் ஸ்தானத்தை ராகு பார்வை இடுவது உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் கூட்டு தொழிலில் அவர்கள் மூலம் வருமானம் கிடைக்க பெறுவீர்கள். உதவிகள் சிலருக்கு கிடைக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். இறைவழிபாடு சிறந்த வழியை பெற்று தரும்.
பரிகாரம்
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் துர்க்கையம்மன் வழிபாடு செய்து விளக்கு எண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் செய்து தானம் செய்துவர கஷ்டங்கள் விலகி தடைகள். நீக்கி வளம் பெறுவீர்கள்.
கடகம்
எதையும் சாதிக்க வேண்டுமென்று நினைத்து செயல்படும் கடக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த கேது இனி ராசியிலும், அட்டம ஸ்தானத்தில் இருந்த ராகு களத்திர ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் செயல்படுவார்கள். தடைகளையும், மன உளைச்சலையும் தந்து வந்த நிலைமாறி, இனி நம்மாலும் முடியும் என்ற நிலையை பெறுவீர்கள்.
துவக்கத்தில் ராசியில் கேது குருவுடன் இணைவு பெறுவது சிறந்த பலனை பெற்று தரும். தனஸ்தானத்தில் கேது குருவோடு 20-10-2026 இணைவு பெறுவது குருவால் சில பொருளாதார நிலை பெற்று வந்தீர்கள்.
அது கேது ராசிக்கு வந்த பிறகும் தொடரும் ஆறு மாத காலம் இந்த பலனை நல்ல முறையில் பெறுவீர்கள். அதன்பின்பு பூசத்தில் கேது இணைவு பெறும் போது சற்று கடினமாக இருக்கும். இது எட்டு மாதம் வரை நீடிக்கும். எதுவும் நிரந்தரமில்லை என்று நிலைபாடு இருந்தால் பொருளாதார இழப்பு இல்லை.
வரவுகளை பார்த்து அதிக முதலீடுகளை போடும் போது இந்த காலநிலையும் அறிந்து போடவேண்டும். ஓன்லைன் வர்த்தகத்தில் முதலீடு குறுகிய காலமாக வைத்து உடனே வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதனை நடைமுறைபடுத்தினால் வெற்றி நிச்சயம் லாப ஸ்தானத்தை கேது பார்வை இடுவதால் இந்த அறிவாற்றல் உங்களை ஊக்கபடுத்தி பலன் பெற செய்யும் மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு வெற்றியை பெற்று தரும்.
இதுவரை ராகு அட்டம ஸ்தானத்தில் இருந்ததால் காரிய தடை இருந்து வந்தது. இனி கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகள், வர்த்த முன்னேற்றம் போன்றவை இனி சிறப்பாக நடக்கும். குரு பார்வை ராகுக்கு இருப்பதால் திருமண தடை நீங்கும் விரைவில் திருமணம் நடக்கும்.
புதிய நல்ல திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நண்பர்களின் உதவி கிடைக்கும். ராகு பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவது புனித யாத்திரைகள் சென்று வருதல், நதி, கடல் நீரை கடந்து சாதிக்க வேண்டுமென்று எண்ணுவீர்கள். குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவீர்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு பார்ப்பது முன்ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடுவதற்கு வழிகிடைக்கும். முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகளுக்கான கடன் வாங்கும் நிலை உண்டாகும். ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்வீர்கள். வரவுக்குள் செலவு செய்து கொள்ள பழகி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உறவுகள் இணக்கமாக இருக்க அரவணைப்பீர்கள்.
பரிகாரம்
பௌர்ணமி நாட்களில் அம்மன் ஆலயம் சென்ற நெய் தீபமேற்றி நவகிரக ராகு / கேதுவுக்கு செவ்வரளி பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையை பெற்று தரும்.
சிம்மம்
தனக்கென்று தகுதியை வளர்த்து கொண்டு செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ராசியில் அமர்ந்த கேது இனி விரையத்திலும், களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு இனிவரும் 13-11-2026 முதல் ஆறாமிடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். மறைவு ஸ்தானங்களில் ராகு ./ கேது அமர்ந்து செயல்படுவது நன்மையும், தீமையும் பெறுவீர்கள்.
இதுவரை களத்திரஸ்தானத்தில் இரு்த ராகு ரண, ரோக சத்ரு ஸ்தானத்தில் அமருவது தீராத கடன் பிரச்சனை, இனம் தெரியாத நோய், எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிட்டும். இந்த பலன் அமையாத மற்றவர்களுக்கு சகலவித கஷ்டங்களும் நீங்கும். ராகு மூன்றாம் பார்வையாக சுகஸ்தானத்தை பார்வை இடுவது உடல்நலனின் இருப்பவருக்கு நல்ல தீர்வு உண்டாகும். விரைவில் குணம் அடைவீர்கள்.
ஜாதக தோசம் இருப்பவருக்கு திடீர் நோய் வந்து, அதிக பாதிப்பை தரும்.. தீர்க்க முடியாத கடன் இருந்தவருக்கு புதிய கடன் வசதி மூலம் கடன் அடைக்க வழி கிடைக்கும்.
சமூகத்தில் உங்களின் அந்தஸ்து மரியாதை கூடும். உங்களுக்கு என்று சில சலுகைகள் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது இருந்த பல குற்றங்கள் குறைபாடுகள் நீங்கி உண்மை வெளிபடும். நன்மை உண்டாகும் பொருளாதார வளம் பெறுவீர்கள்.
ராசியில் அமர்ந்த கேது விரைய ஸ்தானத்தில் அமர்ந்து தெளிவான முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையை பெறுவீர்கள். கருத்து வேற்றுமையுடன் இருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி இணைந்து வளம் பெறுவீர்கள். சரியான முடிவுகளை எடுத்து எதிர்ப்புகளை வென்று வளம் பல பெறுவீர்கள் கனவுகளை நனவாக்கி கொள்வீர்கள். வெளிநாடு பயணம் செல்ல எடுத்த முயற்சிகள் வெற்றியை தரும்.
சிலருக்கு புதிய பதவி கிடைக்கப் பெறுவீர்கள். அரிய பல ஆன்மீக தகவல்களை பெற்று வளம் பெறுவீர்கள். நல்லவர்கள் தொடர்ந்து உங்களுக்கு ஆதரவு தருவது புதிய முயற்சிக்கு பக்க பலமாக அமையும்.
குருவுடன் கேது இணைவு பெறுவது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தடைபட்ட காரியம் செயல்படதுவங்கும். தொழில் ஸ்தானத்தை கேது பார்வை இடுவது உழைப்பாலும் மன உறுதியாலும் தொழிலை சிறப்பாக கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க பெறுவீர்கள். இடைக்காலத்தில் சில கஷ்டங்கள் வந்தாலும் எளிதில் வெற்றியைப் பெறுவீர்கள்.
இரக்க குணமும் விட்டு கொடுக்கும் மனநிலையும் உங்களின் வாழ்வில் வளர்ச்சி பெற உதவியாக இருக்கும். எத்தனை உயர்பதவியில் இருந்தாலும் பணிவாக இருந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்.
பரிகாரம்
பௌர்ணமி நாட்களில் நாக தேவதைக்கு மஞ்சள் பால் வைத்து புளியன்னம் வைத்து வேண்டுதலை சொல்லி தானம் செய்துவர உங்களின் வேண்டுதல் விரைவில் நிறைவேறும். பொருளாதாரம் தன்னிறைவு பெறும்.
கன்னி
கவர்ச்சியான பேச்சாலும், திடமான செயலாலும் வளம் பெறும் கன்னி ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் ராகுவும், விரையத்தில் கேதுவும் அமர்ந்திருந்தார்கள். இனிவரும் 13-11-2026 முதல் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும், கேது லாபஸ்தானத்திலும் அமர்ந்து செயல்படுவார்கள். ஒன்றரை ஆண்டுகளின் அதிக நற்பலன்களை பெறுவீர்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும் செயல்படுத்தவும் ஊக்கமும் ஆக்கமும் கிடைக்கப் பெறுவீரகள். எதிர்கால நலன் கருதி சில தடங்கல்களை விரைவில் மீட்டு நன்மையைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நல்ல பலனை பெற்று தரும்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு இருப்பது காரியதடை தந்தாலும் உங்களின் சொந்த முயற்சிகளுக்கு நல்ல பலனை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை இணக்கமான உறவுகளை தொடர்ந்து பராமரித்து வருவீர்கள். ஏழாமிடத்தை ராகு பார்வை இடுவது திருமண தடை உண்டாகும். குரு பார்வை பெறுவதால் விரைவில் திருமணம் நடக்கும். வீடுமனை வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.
லாப ஸ்தானத்தில் கேது குருவுடன் இணைவை பெறுவது பொருளாதார பெருக்கத்தையும் செய்யும் தொழிலில் மேன்மையும் பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தை வீண் செய்யாமல் உடனே எதையும் செய்ய வேண்டுமென்றும் எண்ணுவீர்கள்.
மூன்றாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தை கேது பார்வை இடுவது உங்களின் நீண்ட நாள் லட்சியத்தை அடைய வழி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடக்கும் செய்யும் தொழிலை விருத்தி செய்து கொள்ள உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தனிப்பட்ட முறையில் சிலருக்கு முக்கியத்துவம் தரமாட்டீர்கள். உங்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை செயல்படுத்துவீர்கள். சுய ஜாதகத்தில் யோக தசா புத்தி உள்ளவர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும். மற்றவருக்கு பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். கேது பூச நட்சத்திரத்தில் அமரும் காலம் முதலீடுகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நண்பராக இருந்தாலும், நெருங்கி உறவுகளாக இருந்தாலும் பண விடயத்தில் கறாராக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் வளர்ச்சியே காணும்.
பரிகாரம்
வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு இருபுறமும் இருக்கும் ராகு கேதுவுக்கு நெய் தீபமேற்றி செவ்வரளிபூ போட்டு பானகம் வைத்து (புளி, வெல்லம்) வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
துலாம்
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் முழு கவனம் செலுத்தும் துலாம் வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ராகு ஐந்தாமிடத்தில் இருந்து வந்தவர் இனி சுகஸ்தானத்திற்கும் லாபஸ்தானத்தில் இருந்த கேது இனி தொழில் ஸ்தானத்திற்கும் வரும் 13-11-2026 முதல் ராகு / கேது அமர்ந்து பலன் தருகிறார்கள். கேந்திர ஸ்தானத்தில் அமர்வது நற்பலன்களை கொடுப்பார்கள்.
சுகஸ்தானத்தில் ராகு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொருளாதாரத்திலும், தொழிலிலும் நல்ல வளர்ச்சியை பெற்று தருவார். ராகு கொடுக்க கூடிய இடத்தில் இருப்பதால் தடையற்ற வருமானம் கிடைக்க பெறுவீர்கள். செய்யும் தொழிலில் உங்களின் கவனம் பலமடங்குகள் இருந்து வருவது மேன்மையை பெற்று தரும். வண்டி வாகனம் வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவற்றிக்கு வழி கிடைக்கும்.
ராகுவின் பார்வை ஆறாமிடத்திலும் இருப்பது இதுவரை பட்ட கடன்கள் படிப்படியாக தீர்த்து கொள்ளும் வாய்ப்பையும் பெறுவீர்கள். பல நாள்பட்ட வழக்குகளில் நல்ல மாற்றம் உண்டாகும். விரைவில் தீரும் சந்தர்ப்பம் அமையும். கருத்து வேறுபாடுகளை மறந்து இணக்கமான சூழ்நிலை உருவாகும். யாரையும் நம்பிக்கொண்டு இல்லாமல் உங்களுக்கென்று நீங்களே செயல்பட்டு நன்மை பெறுவீர்கள்.
இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த கேது தொழில் ஸ்தானத்தில் அமர்வதும் விரையஸ்தானத்தை கேது பார்வையிடுவது வெளிநாடு தொடர்புகள். வெளிநாட்டு வர்த்தங்கள் வெளிநாட்டு வேலை சம்மந்தமான பல வாய்ப்புகள் இனி உங்களை தேடிவரும். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வருபவருக்கு சொந்த ஊரில் சொந்த தொழில் துவங்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். கேதுவுடன் குரு இணைவு பெறுவது செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெற்று வளம் பெறுவீர்கள்.
கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த தடைநீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். உறவுகளும். நண்பர்களும் இனி உங்களுக்கு நல்ல அனுசரணையை தருவார்கள். கேதுவின் பார்வை எட்டாமிடத்தில் அமைவது கெட்ட குணமுள்ள சில நண்பர்களின் நட்பு இருந்தாலும் அவர்களிடம் அதிக தொடர்புகளை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மையை தரும். குடும்பத்தில் சின்ன சச்சரவு வந்து மறையும். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக தொடர்பு உங்களுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமையும். புத்துணர்வுடன் இருப்பீர்கள். பணபுழக்கம் ஒன்றாக இருக்கும்.
பரிகாரம்
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து எருக்கன் மாலை போட்டு தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வெள்ளை நிறத்தில் பூ வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் வேண்டுதல் விரைவில் நடக்கும் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்
மனவலிமையும், கொள்கைப் பிடிப்பும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை சுகஸ்தானத்தில் இருந்த ராகு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்தில் இருந்த கேது பாக்கிய ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்ந்து பலன் தருவார்கள். நினைத்த காரியம் நினைத்தபடி நடக்க எல்லா உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
இதுவரையிலும் சுகஸ்தானத்தில் இருந்து வந்த ராகு இனி மூன்றாமிடத்தில் அமர்வது யோக பலன்களையும், எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனையும் பெற்று தருவார். ராகுவுக்கு குரு பார்வை பெறுவது மேலும் சிறப்பான பலன்களை பெறும் வாய்ப்பு அமையும். ராகு மூன்றாம் பார்வையாக உங்களின் ராசியை பார்ப்பது எடுத்த காரியம் கைகூடும். நினைத்தபடி சில காரியம் நற்பலன்களை பெற்று தரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், எதிர்ப்புகள் குறைந்து வளர்ச்சியையும் பெற்று வருவீர்கள். ராகுவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வையிடுவதால்.. அங்கு சனி அமர்ந்து குரு பார்வை பெறுவதும், முன் ஜென்ம தோச பரிகாரம் செய்து, இந்த பிறவி பயனை அடைய பரிகார பூஜைகள் செய்வீர்கள்.
சிலருக்கு ஜாதக தோசம் இதன் மூலம் சரியாகும். தொழிலாளர்களின் நலனை காக்கும் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி செயல்படுவீர்கள்.
கேது தொழில் ஸ்தானத்திலிருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல பலனை பெற்று தரும். குரு கேதுவுடன் இணைந்து உங்களின் ராசியையும், ராகுவையும், சனியையும் பார்வையை இடுவது கெடுபலன்களை தரும். கிரகங்களின் பாதிப்பை குறைத்து நன்மையை பெறுவீர்கள். கேது மூன்றாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவது சிலருக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும்.
வீண் வாக்குவாதத்தை குறைத்து காரியத்தில் கண்ணாக இருந்து செயல்படுவீர்கள். கேதுவின் பார்வை லாபஸ்தானத்தில் அமைவது நல்ல வளர்ச்சியை பெற்று தரும். புனித யாத்திரை சென்று தீர்த்தம் ஆடுதல், ஆன்மீக பயணம் சென்று வருதல், மகான்களின் தரிசனம், பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
பல நாட்கள் வராத கடன் தொகைகள் வசூலாகும். மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிரிந்த உறவுகள் வந்து இணைவார்கள். உடல் நலனின் கவனம் செலுத்தி வளம் பெறுவீர்கள்.
பரிகாரம்
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு பைரவர் வழிபாடு செய்து நவகிரக ராகு / கேதுவுக்கு நெய் தீபமேற்றி செவ்வரளி பூ வைத்து வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.
தனுசு
துணிச்சலும் மனவலிமையும் கொண்டு விளங்கும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருந்த ராகு இனி தனஸ்தானத்திலும், கேது பாக்கிய ஸ்தானத்திலிருந்து அட்டம ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள். ராகு நற்பலன்களையும், கேது கஷ்டங்களையும் தருவார்கள். சிறு தடைகள் வந்து மறையும் திருமண தடை வரும். தொழில் மந்தமாக இருக்கும்.
இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த ராகு இனி தனஸ்தானத்தில் அமர்வதும் குரு பார்வை பெறுவதும் தனவரவுக்கு சிறந்த வழியாக அமையும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும்.
வரவேண்டிய தொகைகளை வரவழைக்க நீங்கள் எடுக்கும். முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ராகு மூன்றாம் பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது வெளிநாட்டு தொடர்புகளும், வெளிநாட்டு நண்பரின் தொடர்பும் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல விரும்பும் உங்களுக்கு அதற்குண்டான வாய்ப்புகள் அமையும்.
அவிட்ட நட்சத்திரத்தில் முயற்சியும், திருவோணத்தில் ராகு வரும் போது வெளிநாடு வேலையும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு சொந்த தொழில் செய்ய பொருள் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல் வாழ்க்கை சிலருக்கு எதிர்பாராத பதவியும், மக்களிடம் செல்வாக்கு பெறும் வாய்ப்பையும் பெறுவீர்கள்.
செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள். இதுவரை கேது பாக்கிய ஸ்தானத்தில் இருந்தது.. இனி அட்டம ஸ்தானத்தில் அமர்வதும் ராசிநாதன் குருவுடன் இணைவு பெறுவதும், தொழிலிலும், உத்தியோகத்திலும் கவனமுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிட்டும்.
ஆயில்யத்தில் கேது இருக்கும் போது ஆன்மீக புதிய தகவல்கள் வந்து சேரும். கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதையும் எளிதில் கிடைக்க விடாமல் கேது சில தடைகளை செய்து வருவார். பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது பொது விடயங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தேவை இல்லாத பழிச்சொல் ஏற்க வேண்டிவரும் கவனமுடன் இருந்தால் தவிர்க்கலாம்.
கேது எட்டு மாதம் வரையிலும் இந்த பாதிப்பை தருவார் என்பதால் எதிலும் ஒதுங்கி இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கொள்வீர்கள். சிலருக்கு சிறுதடை வந்து மறையும். கேதுவின் மூன்றாம் பார்வை ஆறாமிடத்தில் இருப்பது எதிர்ப்பை தாங்கி கொள்ளும் வலிமை பெறுவீர்கள். கேது 11-ம் பார்வை தொழில் ஸ்தானத்தில் இருப்பது செய்யும் தொழிலில் தொழிலாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்பாக அமையும்.
பரிகாரம்
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை போட்டு நெய் தீபமேற்றி சிவப்பு நிறம் கதம்ப பூக்களால் மாலை சாற்றி, வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும்.
மகரம்
திடமான நம்பிக்கையும் பொறுமையும் கொண்டு விளங்கும் மகர ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த ராகு இனி ராசியிலும், அட்டம ஸ்தானத்தில் இருந்த கேது களத்திர ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள்.
ஒன்றரை ஆண்டுகள் இநத வீடுகளில் இருந்து பலன் தருவார்கள். உங்களின் ராசிக்கு செயல்பாடுகள் சிறிதாக இருந்தாலும் நல்ல விருத்தியை பெற்று தருவீர்கள். பொருளாதாரத்திலும், பொது வாழ்விலும் சிறிந்து விளங்குவீர்கள். இதுவரை பட்ட கஷ்டம் நீங்க பெறுவீர்கள்.
இதுவரை தனஸ்தானத்தில் இருந்த ராகு இனி ராசியில் அமர்வதால், எதையும் மேம்போக்காக எண்ணாமல் எதையும் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பீர்கள். வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். தொழில் செய்து வருபவருக்கு ராகு லாபஸ்தானத்தை பார்ப்பது நல்ல வளர்ச்சியை பெற்று தருவார்.
ராகுவின் பார்வை மூன்றாமிடத்தை பார்வை இடுவது வெளியூர், வெளிநாடு பயணம் பற்றி நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆரம்பத்தில் குரு பார்வையில் ராகு இருப்பதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கிட்டும். இது நடக்காது என்ற செயல் கூட நடந்து விடும்.
கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். தொழிலாளர்களின் நலனின் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
எதை சுமை என்று நினைத்தீர்களோ அதுவே எளிமையாகி விடும். பாதியில் நின்ற காரியம் தடையின்றி நடக்கும். ஆற்றலும், அறிவும் உங்களின் பலமாக அமையும். செய்யும் தொழிலை தெய்வமாக எண்ணுவீர்கள்.
இனி கேது அட்டம ஸ்தானத்திலிருந்து களத்திர ஸ்தானத்திற்கு வருவது கூட்டுத் தொழில் செய்பவருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஓன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். பழைய நண்பரின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். ஆன்மீகம் சார்ந்த பயணம் உங்களுக்கு நல்ல ஊக்கத்தை தரும்.
கேதுவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சேரும். காதல் செய்து வந்தால் உங்களின் காதலை வெளிபடுத்துவீர்கள். எளிதில் எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.
கேதுவின் பார்வை பாக்கிய தானத்தில் அமர்வது தீர்த்த யாத்திரை செல்லுதல் முன்னோர்கள் வழிபாடு பரிகார பூஜை செய்து கர்ம வினைகளை போக்கி கொள்ளும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். மருத்துவ துறையினருக்கு வெகுமதியும் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு திருடு போன பொருள் கிடைக்கப் பெறுவீர்கள். பூச நட்சத்திரத்தில் கேது அமரும் போது சில சோதனைகளை சந்திக்க வேண்டிவரும். அந்த காலங்களின் சற்று கவனமாக செயல்பட்டு வந்த நல்ல பலன் உண்டாகும்.
பரிகாரம்
பௌர்ணமி, அமாவாசை காலங்களில் துர்க்கை, காளிக்கு சிவப்பு பட்டு வாங்கி கொடுத்து நெய் தீபமிட்டு புளி சாதம் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்து வர உங்களின் அனைத்து வித தடையும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும்.
கும்பம்
இலட்சியத்தை அடைய கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு வரும் கும்ப ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு இதுவரை ராசியில் இருந்த ராகு விரையஸ்தானத்திலும், ஏழாமிடத்தில் அமர்ந்த கேது ஆறாமிடத்திற்கும் வரும் 13-11-2026 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் அமர்கிறார்கள். இதனால் இதுவரை தடைபட்ட காரியங்கள் இனி சிறப்பாக இயங்கும். நல்ல காரியங்களை செய்ய ஒரு போதும் தயங்கமாட்டீர்கள். நெருக்கடியான சூழ்நிலையில் கூட உங்களின் கொள்கைகளை விட்டு கொடுக்கமாட்டீர்கள். சமயோசிதமாக நடந்து கொள்வீர்கள்.
இதுவரை ஏழாமிடத்தில் இருந்த கேது சத்ருஸ்தானத்தில் குருவுடன் அமர்வதால் மிக சிறப்பான பலனை பெறுவீர்கள். ராகு கேதுவுடன் குரு தொடர்பு எதிர்பாராத நன்மைகளை பெற்று தரும். ஆயில்ய நட்சத்திரத்தில் கேது இணைவு பெறும் போது அதிசார குருவாக சிம்மத்தில் இருந்து மீண்டும் கேதுவுடன் இணைவு பெற்று தீராத கடன் சுமைகளுக்கு நல்ல தீர்வு எட்டும் படி அமைய பெறுவீர்கள். உங்களுக்கு உதவி செய்ய நண்பர்களின் உதவி கிட்டும்.
எதை நினைத்து இதுவரை வருத்தம் கொண்டீர்களோ.. இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். கேதுவின் பார்வை சுகஸ்தானத்தில் அமைவது வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டு கட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் எட்டாம் இடத்து கேது பார்வை சிறு தடைகளை கொடுத்தாலும் உங்களின் விடாமுயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். யாரையும் நம்பி கொண்டு இல்லாமல் நீங்களே தீர்வை நோக்கி பயணம் செய்வீர்கள்.
இனி ராசியில் இருந்த ராகு விரையஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் செய்யும் தொழிலில் பல சவால்களை சந்தித்து சாதனைகளை செய்வீர்கள். எதையும் போராடி பெறுவது என்பது உங்களை பொறுத்த வரை சகஜமாக எடுத்துக் கொள்வீர்கள். பொதுவான எந்த பிரச்சனையும் கையாளும் போது மற்றவரிடம் நீங்கள் கேதுவை ராகு பார்வை இடுவதும் குருவுடன் இணைவு பெறுவது. உங்களின் ஒவ்வொரு செயலுக்கு ஊக்கம் பெற்று வளம் பெறுவீர்கள்.
தனஸ்தானத்தை ராகு பார்வை இடுவது பொருளாதார நலன்களில் கவனம் செலுத்துவீர்கள். தனஸ்தானத்தில் ராசிநாதன் சனி அமர்ந்து குரு பார்வை பெறுவது நல்ல வளர்ச்சியை பெற்று தரும். சரியான காரியத்தை செய்யும் முன்பு எதையும் ஆராயும் வழி நல்லது. விரைய ராகு உங்களின் வெளியூர் பயணம் வெளிநாடு பயணம் சிறக்க வாய்ப்புகளை பெற்று மேன்மையை அடைய செய்வார்.
பரிகாரம்
நவகிரக ராகு / கேதுவுக்கு ஞாயிறு மாலையும் ராகு காலத்தில் (04.30 - 06.00) மணிக்கு இரண்டு நெய் தீபமிட்டு செவ்வரளிபூ மாலை சாத்தி புளியன்னம் வைத்து வேண்டிக் கொண்டு பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டிய வசதிகளையும் தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
மீனம்
நம்பிக்கையும் எந்த காரியத்தையும் தொடர்ந்து செய்யும் மீன ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு விரையஸ்தானத்தில் இருந்து வந்த ராகு இனி லாபஸ்தானத்திலும் கேது ஆறாமிடத்திலிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் வரும் 13-11-2026 முதல் அமர்கிறார்கள். இதனால் பல வழிகளில் நன்மையும், தீமையும் கலந்தே அமைய பெறுவீர்கள். மனசோர்வு நீங்கி உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும். உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்வீர்கள்.
இதுவரை ஆறாமிடத்தில் கேது இருந்து காரியத்தடைகளை பெற்று வந்தீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது உங்களின் முயற்சிகளை தடை செய்து வருவார் மூன்றாம் பார்வையாக எடுக்கும் முயற்சிக்கும் தடங்கல் வரும் என்றாலும்.. குருவின் இணைவாலும் ராசியை குரு பார்வை இடுவதாலும், தடைகள் நீங்கி நன்மை பெறுவீர்கள். குரு 2027 ஜூன் மாதம் பெயர்ச்சி ஆனவுடன் கேதுவும் தாக்கம் சற்று கடுமையாக இருக்கும்.
எடுத்த காரியம் சிறு தடைகளை பெற்று வரும்.. கேது ஏழாமிடத்தை பார்வை இடுவது வெளிநாடு பயணம் சென்று வருதல், கூட்டுத் தொழில் சரியான பாதையில் பயணம் செய்து பலன் பெறுவீர்கள். குறுகிய கால பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். எந்த சூழ்நிலையில் மனம் தலராமல் செயல்படுவீர்கள். சிலரின் ஆதரவு இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் நீங்களை கவனம் செலுத்தி பலன் பெறுவீர்கள்.
இனி விரையத்தில் இருந்த ராகு இனி லாபஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவதும், ராசிநாதன் குரு பார்வை ராசிக்கு இருப்பதும் தொழில் மற்றும் உத்தியோகத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பாதியில் நின்ற சில காரியம் சிறப்பாக அமையும். வாழ்வாதாரம், வாழ்வுரிமைகளை பற்றி சிந்தித்து அதற்கான முயற்சிகளை செய்து காரியத்தை சரியான வழியில் கொண்டு சென்று நலம் பெறுவீர்கள்.
முதலீடு இல்லாத தொழிலில் நல்ல முன்னே்றறம் உண்டாகும். வரும் 2027 ஜூன் மாதத்திற்கு பின்பு உங்களின் தொழில் மீண்டும் சுறுசுறுப்படையும் அதுவரை லாபமும், நஷ்டமும் கலந்தே வந்து வளம் தரும். கலைதுறையினருக்கும், அசிரியர் பணியில் இருப்பவருக்கு ஓரளவு நல்ல பலனை பெறவீர்கள். ராகுவின் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது தீர்த்தி யாத்திரை சென்று வருவது அமையும். சிலருக்கு வெளிநாட்டு தொடர்பு மூலம் தொழிலில் வளர்ச்சியும் பொருளாதார வளமும் கிடைக்கும்.
பரிகாரம்
ஞாயிறு ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு ராகு / கேதுவுக்கு நெய் தீபமிட்டு பைரவருக்கு எலுமிச்சை மாலை போட்டு மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வரும். பக்தர்களுக்கு தானம் செய்து வர நினைத்த காரியம் சிக்கீரம் கைகூடும். பொருளாதாரம் மேன்மை அடையும்.
கணித்தவர் - ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM