அரச இலக்கிய விருது வழங்கல் - 2026

31 Aug, 2026 | 09:46 AM
image

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் அரச இலக்கிய விருது வழஙகல் விழா -2026 இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ் விருது வழங்கல் நிகழ்வு 2026 செப்டெம்பர் மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 3.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அழைப்பின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் மற்றும் இலங்கை இலக்கியத்துறைக்கு தமது உன்னத படைப்புகளால் ஊட்டமளித்த எழுத்தாளர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.

இதன்போது சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் 2025 ஆம் முதல் பதிப்பாக வெளிவந்த சுய நாவல், சுய சிறுகதை, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கிய படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், சுய அறிவியல் புனைகதை, சிறுவர் இலக்கிய படைப்பு, சுய புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித விடய நூல்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு,  மொழிபெயர்ப்பு  கவிதை படைப்பு, மொழிபெயர்ப்பு நாடகம், மொழிபெயர்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு ஆகிய பிரிவுகளுக்கான சிறந்த படைப்புக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இலங்கையின் தமிழ் இலக்கியத்துறைக்கு ஆற்றிய உன்னத சேவை நிமித்தம் 2026 ஆம் ஆண்டுக்கான சாகித்தியரத்னா எனும் தேசத்தின் உயர் அரச வாழ்நாள் சாதனை விருது தமிழ் மொழியில் பன்முக ஆளுமை எழுத்தாளர், கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) அவர்களுக்கும் சிங்கள மொழியில் கவிஞர் பராக்ரம கொடிதுவக்கு அவர்களுக்கும் ஆங்கில மொழியில் பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07