(நெவில் அன்தனி)
ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்தினால் (AFC) நடத்தப்படும் ஏஎவ்சி 20 வயதுக்குட்பட்ட சீனா 2027 தகுதிகாண் சுற்றின் மேம்பாட்டுப் பிரிவுக்கான (Development Phase) கே குழுவில் இலங்கை பங்குபற்றுகிறது.

கே குழுவுக்கான மேம்பாட்டுப் பிரிவு போட்டிகள் மியன்மாரில் திங்கட்கிழமை (31) ஆரம்பமாகிறது.
இக் குழுவில் மியன்மார், மாலைதீவுகள், புருணை தருஸ்ஸலாம், இலங்கை ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.
இம்முறை ஆசிய தகுதிகாண் சுற்று இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகின்றது.
ஏஎவ்சி தரவரிசையில் முதல் 32 இடங்களில் இருக்கும் அணிகள் 8 குழுக்களில் தகுதிகாண் சுற்றில் (Qualification Phase) பங்குபற்றும். ஒவ்வொரு குழுவிலும் கடைசி இடத்தைப் பெறும் 8 அணிகள் மேம்பாட்டு பிரிவுக்கு தரமிறக்கப்படும்.
தரவரிசையில் அடுத்த 12 இடங்களில் இருக்கும் இலங்கை உட்பட 12 அணிகள் மேம்பாட்டுப் பிரிவில் 3 குழுக்களில் போட்டியிடும்.
இந்த மூன்று குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் 6 அணிகள் 2031க்கான ஏஎவ்சி 20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இம் முறை கே குழுவில் இடம்பெறும் இலங்கை தரமுயர்வு பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டிவரும். சில மாதங்களுக்கு முன்னர் மாலைதீவுகளை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்ட இலங்கை, ஆசிய கிண்ண மேம்பாட்டுக் குழவில் மிண்டும் சந்திக்கவுள்ளது. அந்த வெற்றி இலங்கை விரர்களை வெகுவாக உற்சாகம் அடையச் செய்துள்ளது.
இக் குழுவுக்கான முதலாவது போட்டியில் மியன்மாரை நாளை திங்கட்கிழமை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. தொடர்ந்து மாலைதீவுகளை வியாழக்கிழமையும் புருணை தருஸ்ஸலாமை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் இலங்கை சந்திக்கும்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி திறமையாக விளையாடி வெற்றி பெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு ஸாஹிரா வீரர் மொஹமத் கதீம் தலைவராகவும் ஏ. பிரான்சிஸ் பெரேரா, மொஹமத் பரிக் ஆகிய இருவரும் இணை உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் இலங்கை வம்சாவளி வீரர்கள் இருவரும் இடம்பெறுகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் அப்ஃபீல்ட் கழகத்துக்காக விளையாடிவரும் டில்பா சித்ர திசும் செனுல, ஐக்கிய அரபு இராச்சியம் ஜுமைரா கல்லூரி மாணவனும் ஐக்கிய அரபு இராச்சியம்,மென்செஸ்டர் சிட்டி கழக வீரருமான அப்துல்லா பாயிஸ் நஸிம் ஆகிய இருவரே இலங்கை வம்சாவளி வீரர்களாவர்.
அணி விபரம்
கோல்காப்பாளர்கள்: ஷாதின் ஷஹீத் (புனித பேதுருவானர், அப்கன்ட்றி லயன்ஸ்), அப்துல் மாலிக் (ஹமீத் அல் ஹுசெய்னி, ஜாவா லேன்), ரிக்காஸ் முஹம்மத் (ஸாஹிரா, சோண்டர்ஸ்).
பின்கள வீரர்கள்: வசிம் அஹ்மத் ஆமிஷ் (இஸிபத்தன, சொலிட்), மொஹமத் பரிக், ஹாலிக் அஹமத், ஷவிந்து கஹட்டகஹாவத்த (புனித சூசையப்பர், கிரேட் ஸ்டார்), முஹம்மத் யாசிர் ஹமீத் அல் ஹுசெய்னி, பெலிக்கன்ஸ்), மொஹமத் மஸியாத் (ஹமீத் அல் ஹுசெய்னி, நியூ ஸ்டார்), ஹாத்திம் அஹமத் (ஸாஹிரா, மொரகஸ்முல்லை), ஹாதிம் அஹமத் (ஸாஹிரா, கிண்ணியா ஜீனியஸ்).
மத்திய கள வீரர்கள்: அஹமத் ஹிஜாஸி (கேட்வே - கொழும்பு, கலம்போ எவ்சி), மொஹமத் ஸெய்த் (ஸாஹிரா, சோண்டர்ஸ்), அப்துல்லா பாயிஸ் நசிம் (ஜுமெய்ரா கல்லூரி, மென்செஸ்டர் சிட்டி - ஐக்கிய அரபு இராச்சியம்), பாரிஸ் உமர் (தாருஸ்ஸலாம், புளூ ஈக்ள்ஸ்), ஏ. பிரான்சிஸ் பெரேரா (கேட்வே கொழும்பு, கலம்போ எவ்சி),
முன்கள வீரர்கள்: ரஷாத் ஷிஹாப் (றோயல், கலம்போ எவ்சி), டில்பா சித்ர திசும் செனுல (அப்ஃபீல்ட் எவ்சி, அவுஸ்திரேலியா), மொஹமத் சதீர் (ஸாஹிரா, றினோன்), ஹுசெய்ன் அப்துல்லா (ஸாஹிரா, பொலிஸ் கழகம்), பசுல்தீன் அப்துல்லா (ஹமீத் அல் ஹுசெய்னி, அப்கன்ட்றி லயன்ஸ்), மொஹமத் ரிஷாத் (பேருவளை அல் ஹுமைசரா, ரெட் ஸ்டார்), மொஹமத் கதீம் (ஸாஹிரா, கிண்ணியா நோவா கழகம்).
தலைமைப் பயிற்றுநர்: அஹ்மத் அல்-மனாய். உதவிப் பயிற்றுநர்கள்: இம்ராம் மொஹமத் மற்றும் ஒகஸ்டின் ஜோர்ஜ், கோல்காப்பாளர் பயிற்றுநர்: மொஹமத் இலியாஸ், அணி முகாமையாளர்: சம்ப்பத் நாகந்தல.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM