(நெவில் அன்தனி)
அங்குரார்ப்பண ஐசிசி மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் வரவேற்பு நாடு என்ற அந்தஸ்தைக் கொண்டிருந்த இலங்கை, அதற்கான உரிமத்தை இப்போது இழந்துள்ளது.
ஆறு அணிகள் பங்குபற்றும் இந்த அங்குரார்ப்பண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த போட்டித் தொடரை அதே காலப்பகுதியில் வேறொரு நாட்டில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இப் போட்டி பெரும்பாலும் இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் புதிய வரவேற்பு நாடு எது என்பது எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஐசிசி பணிப்பாளர் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் அரசியல் தலையீடு என்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கரிசனை இதற்கு காரணம் என தெரியவருகிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட தொடர் நடைபெற்ற காலப்பகுதியில் இது தொடர்பாக ஐசிசி கரிசனை வெளியிட்டிருந்ததாக தகவல் கசிந்திருந்தது.
இப்போது அது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிசி எடுத்த தீர்மானம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டுள்ளாக நிலைமாறுதல் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இடைக்கால சபைக்கு ஒப்பான நிலைமாறுதல் குழு நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இருக்கும் வரை இலங்கையில் ஐசிசி போட்டிகளை நடத்த முடியாது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்ததை அடுத்த அங்குரார்ப்பண மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமை இலங்கையிடம் இருந்து கைநழுவிப் போயுள்ளது.
எந்தவொரு நாட்டிலும் அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் நிர்வாகங்களை ஐசிசி அங்கீகரிப்பதில்லை. மேலும் இலங்கையில் நிலைமாறுதல் குழு நியமிக்கப்பட்டதிலிருந்து ஐசிசி கூட்டங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டதில்லை.
மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான உரிமத்தை இலங்கை இழந்ததால் இரட்டை இழப்பு ஏற்படவுள்ளது.
இதனால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த ஆதாயம் அற்றுப் போவதுடன் மகளிர் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பை இலங்கை பெரும்பாலும் இழக்க நேரிடும்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகளே மகளிர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாட தகுதபெறும்.
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் 6ஆவது இடத்திலும் இலங்கை 7ஆவது இடத்திலும் இருக்கிறது.
தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள நாட்டில் இந்தப் போட்டித் தொடர் நடத்தப்பட்டால் இலங்கை ஆறாவது இடத்தைப் பிடித்தால் மாத்திரமே சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்ற தகுதிபெறும.
இது இவ்வாறிருக்க, கடந்த 3 வருடங்களில் ஐசிசி கிரிக்கெட் நிகழ்ச்சிக்கான உரிமையை இலங்கை இழப்பது இது இரண்டாவது தடவையாகும்.
2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமையை இதே காரணத்திற்காக இலங்கை 2023ஆம் ஆண்டு இழந்திருந்தது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM