டிபெண்டர்ஸ் எவ்சியை வெற்றிகொண்ட ரெட் ஸ்டார் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது

Published By: Vishnu

30 Aug, 2026 | 08:18 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நடைபெற்ற சுப்பர் லீக் கால்பந்தாட்டப்  போட்டியில் டிபெண்டர்ஸ் எவ்சி அணியை 5 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மிக இலகுவாக பேருவளை ரெட் ஸ்டார் அணி  வெற்றிகொண்டது.

இந்தப் போட்டியில் தனது 3ஆவது வெற்றியை ஈட்டிய ரெட் ஸ்டார் 11 புள்ளிகளைப் பெற்று சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டது.

இரண்டு அணிகளும் சுப்பர் சிக்ஸையும் வெற்றியையும் குறிவைத்து இன்றைய போட்டியை எதிர்கொண்டன.

போட்டி ஆரம்பித்து 11 நிமிடங்கள் ஆன நிலையில் நிரோஷன் பத்திரண முதலாவது கோலை போட்டு டிபெண்டர்ஸ் எவ்சியை முன்னிலையில் இட்டார்.

இதன் காரணமாக ரெட் ஸ்டார் நெருக்கடியை எதிர்கொண்டது.

ஆனால், 23ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் சார்பாக சுப்புன் தனஞ்சய கோல் நிலையை சுமப்படுத்தியவுடன் அந்த அணி உற்சாகமடைந்து டிபெண்டர்ஸ் எவ்சியின் கோல் எல்லையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

அதேவேளை, டிபெண்டர்ஸ் எவ்சி அணியும் கடுமையாக போட்டியிட்டது. ஆனால், அவ்வணியின் கோல் போடும் முயற்சிகளை ரெட் ஸ்டார் பின்கள வீரர்களும் கோல்காப்பாளர் மொஹமத் மிஸ்காதும் முறியடித்தனர்.

இடைவேளைக்கான உபாதையீடு நேரத்தில் ரெட் ஸ்டார் முன்கள வீரர் அசந்தே ஜெரோம் ஓங்கி உதைத்த பந்தை டிபெண்டர்ஸ் எவ்சி கோல்காப்பாளர் சஹான் ஹிருஷிக்கவினால் தடுக்க முடியாமல் போனது.

இடைவேளையின்போது ரெட் ஸ்டார் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 2ஆவது நிமிடத்தில் அசந்தே ஜேரோம் மேலும் ஒரு கோலை போட ரெட் ஸ்டார் 3 - 1 என முன்னிலை அடைந்தது.

தொடர்ந்து மாற்று வீரராக 73ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த சந்திரன் கிதுசன் 77ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணியின் 4ஆவது கோலைப் போட்டார்.

போட்டி முடிவடைய சில செக்கன்கள் இருந்தபோது (90 + 3  நி.)  அசந்தே ஜெரோம் தனது தலையால் முட்டி தனது 3ஆவது கோலை போட்டார். அவர் தலையால் முட்டிய பந்து டிபெண்டர்ஸ் எவ்சி அணித் தலைவர் சத்துரங்க மதுஷானின் நெஞ்சில் பட்டு அவரது சொந்த கோலினுள் புகுந்தது.

அடுத்த சில செக்கன்களில் போட்டி முடிவுக்கு வந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58