புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட அமைப்பினர் திறம்பட ஏற்பாடு செய்து நடத்திய இலக்கிய சந்திப்பு நிகழ்வு அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா நல்லாசியுடன் மகளிர் அணித் தலைவி சிவகெளரி (சுடரி) தலைமையில் சனிக்கிழமை (29) வவுனியா குடியிருப்புசிறுவர் பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
இதில் எழுத்தாளர்கள் , வாசகர்கள் , விமர்சகர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மகளிர் அணி உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த இலக்கியச் சந்திப்பானது , இதுவரையில் தமிழ் மொழியில் வெளிவந்த ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களில் பேசப்படும் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் அம்சங்கள் பற்றிய கலந்துரையாடலாக அமைந்திருந்தது.
இதில் வனிதா சேனாதிராசா, வவுனியாவின் மூத்த இலக்கிய வாதியான தமிழ்மணி அகளங்கனின் 'முற்றத்துக்கரடி' சிறுகதை தொகுப்பு பற்றியும் மற்றும் லிசாந்தினி கிருஷ்ணன் ராஜா , புலம்பெயர் எழுத்தாளர் குடத்தனை உதயனின் "அகதியின் நாட்குறிப்பு" நூல் பற்றியும் கருத்துரை வழங்கியிருந்தனர்.
இதில் பங்குபற்றிய பலரும் தமது எண்ணங்களையும் , கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதோடு அங்கு சமூகமளித்திருந்த தமிழ்மணி அகளங்கனும் தனது பதிலுரையை வழங்கியிருந்தார்.
புதிய அலை கலை வட்டம் மகளிர் அணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார் .
இந்நிகழ்வில் மகளிர் அணியின் தலைவி எழுத்தாளர் சுடரி அவர்களது இலக்கியச் செயற்பாட்டினை கௌரவிக்கும் முகமாக அகில இலங்கை சற்சங்க சபையினரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகம் , தென்னிலங்கை போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்கள் என அனைவரினதும் நூல்களும் உள்வாங்கப்பட்டு, பிரதேச ரீதியாக அவை பேசும் வாழ்வியல் அம்சங்கள் பற்றி தொடர்ந்து இந்த சந்திப்புகளில் பேச உள்ளோம்.
ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை இங்கே இந்த இலக்கியச் சந்திப்பு இடம்பெறும். இது எழுத்தாளர்கள், வாசகர்கள் விமர்சகர்கள் , பார்வையாளர்கள் என அனைவருக்குமான களமாக இருப்பதால், இலங்கையில் எப்பாகத்தில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றி புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்து வரும் இலக்கியச் சந்திப்புக்களில் கருத்துரைகள் வழங்க விரும்புபவர்கள், எந்தப் புத்தகத்தைப் பற்றி எப்போது பேச விரும்புகிறீர்கள் என முன்கூட்டியே தகவலைத் தெரிவித்தால் உங்களுக்கான நேரம் ஒதுக்கித் தரப்படும் எனவும் ஆக்கங்கள் இலங்கையரால் எழுதப்பட்டு தமிழ் மொழி மூலம் வெளிவந்த நூலாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக் கப்படுகிறது.




























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM