(ஆர்.ராம்)

ஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது காலத்தினுள் ஐக்கியத்தினை உருவாக்கவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். அத்தகைய நிலையில் தமிழர்களில் ஒரு சிலர் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாது செயற்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வடக்கிற்கு சென்றபோது யாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பகல் போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடமாகாண அமைப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கருத்துப்பகிர்ந்த பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.