(ஆர்.யசி) 

வார்த்தைகளின் ஏமாற்றி நாட்டினை துண்டாடும் அரசியல் அமைப்பினை கொண்டுவரவே ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். தமிழீழம் உருவாக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவசன தெரிவித்தார். 13 ஆம் திருத்தத்தை முழுமையாக எதிர்த்த ஜே.வி.பியினர் இன்று நாட்டை துண்டாடும் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவர முழுமையாக ஆதரவை வழங்குகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய சுதந்திர முன்னணியின் மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.