நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

30 Aug, 2026 | 12:30 PM
image

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, நானுஓயா நு/எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக, இந்தச் சுற்று போட்டியில், பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து கொண்டனர்.

மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கெட் திருவிழா ஆகஸ்ட் 26, 27 ஆம் திகதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

“History Makers – 2010 Batch” ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஆரம்பமாக, ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்வுக்கான பொறுப்புகளை பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விசேட பூஜை நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பாடசாலையிலிருந்து ஏராளமான பழைய மாணவர்கள் பங்கேற்ற வாகனப் பேரணி ரதெல்லை மைதானத்தை நோக்கி புறப்பட்டது.

ரதெல்லை மைதானத்தை சென்றடைந்த பின்னர் மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, பாடசாலைக் கொடி, PPA கொடி மற்றும் 20 Batch-களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகள் ஏற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கோலாகலமான ஆரம்ப விழாவில் பாடசாலை அதிபர், நானுஓயா பொலிஸ் உயரதிகாரி, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ஏற்பாட்டுக் குழுவினர், நலன் விரும்பிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப விழாவில் பாடசாலை அதிபரின் உரை, நானுஓயா பொலிஸ் உயரதிகாரியின் உரை மற்றும் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைச்செல்வன் அவர்களின் உரை இடம்பெற்றதுடன், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

பாடசாலையின் வரலாற்றில் முதன்முறையாக பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து ஒரே தளத்தில் ஒன்றிணைத்த இந்நிகழ்வு, பழைய மாணவர்களின் ஒற்றுமையையும் பாடசாலை மீதான அவர்களின் பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இரண்டாம் நாளில் பல்வேறு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னாள் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் 2015 Batch சம்பியன் பட்டத்தையும், 2019 Batch இரண்டாம் இடத்தையும், 2011 Batch மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏனைய அனைத்து Batch அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், History Makers – 2010 Batch ஏற்பாட்டுக் குழுவினர், 20 Batch-களைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பிரதேச மற்றும் அரசியல் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற DJ இசை நிகழ்ச்சி அனைத்து பழைய மாணவர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன், ஆடல், பாடலுடன் விழா கோலாகலமாக நிறைவுபெற்றது.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கலைச்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நன்றியுரையுடன், நு/எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்த இம்மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07