மது போதையில் செலுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகள்  நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கண்டி- குருநாகல் பிரதான பாதையில் கலகெதரை என்ற இடத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. படுகாயமடைந்த நால்வர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்படி சம்வத்தின் போது சாரதிகள் இருவரும் அதிக போதையில் இருந்தமையே இவ்விபத்துக்கு காரணமென  பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலகெதர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.