சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர் சிகிச்சை

Published By: Digital Desk 2

29 Aug, 2026 | 04:11 PM
image

எம்மில் பலரும் தற்போது உடல் ஆரோக்கியத்திற்காக தண்ணீர் அருந்துவதை விட, உடல் பொலிவாக இருப்பதற்கான நீரை நாளாந்தம் அளவுடன் பாவிப்பதால் சிலருக்கு எதிர்பாராத வகையில் விவரிக்க இயலாத காரணங்களால் சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய நிலையில் சிறுநீரக கற்களை அகற்றுவதற்கு ரெட்ரோகிரேட் இன்ட்ராரீனல் சத்திர சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி நோயாளிகளுக்கு விரைவான பலனை வழங்கி வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

விலா எலும்பு பகுதிகளுக்கு கீழ் வலி , வயிறு வலி,  சிறுநீர் கழிக்கும் போதும் வலி, எரிச்சல், சிறுநீரில் நிறமாற்றம் ஆகிய அறிகுறிகள் இருந்தால், நீங்கள் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அவதானித்து, உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனையும் , சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனையில் உங்களுடைய சிறுநீரக கற்கள் கற்களின் அளவு இரண்டு சென்டிமீற்றர் மற்றும் அதற்குள்ளாக இருந்தால், அதனை முழுமையாக அகற்றுவதற்கு ரெட்ரோகிரேட் இன்ட்ராரீனல் சத்திர சிகிச்சை எனும் நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய சத்திர சிகிச்சை மருத்துவ தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் காரணமாக பாதுகாப்பான பலனை வழங்குகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது யூரிடெரோஸ்கோபி எனும் பிரத்யேக குழாயை சிறுநீர் பாதை வழியாக செலுத்தி, சிறுநீரக கற்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக அவதானித்து, அவற்றை உடைத்து, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட கருவிகளால் அகற்றி, முழுமையான நிவாரணத்தை வெற்றி வீதத்துடன் வழங்குகிறார்கள்.

இத்தகைய சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் வைத்தியர்கள் இதற்கு நோயாளிகள் ஏற்றவரா!? என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள சில பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

இத்தகைய சத்திர சிகிச்சையின் போது கீறல் - வெட்டு ஆகியவை மிக மிக குறைந்த அளவில் உண்டாக்கப்படுகிறது. விரைவான செயல்முறை என்பதால், முழுமையான நிவாரணமும் கிடைக்கிறது. பக்க விளைவுகளும், சிக்கல்களும் அதிகமில்லை. குருதி இழப்பும் இல்லை.

சிறுநீரக திசுக்களுக்கு எந்த சேதமும் இல்லை. இரண்டு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு ஒரே அமர்வில் சிகிச்சையை பெறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கான பலன் அதிகம். என பல்வேறு நன்மைகளை கொண்டிருப்பதால், இத்தகைய சத்திர சிகிச்சைக்கு தற்போது நோயாளிகளிடத்தில் வரவேற்பும், ஆதரவும் பெருகி வருகிறது.

இத்தகைய சத்திர சிகிச்சைக்கு பிறகு சிறுநீரக கற்கள் பாதிப்பு மீண்டும் வராமல் தற்காத்துக் கொள்வதற்காக வைத்தியர்கள் அறிவுறுத்தும் பரிந்துரைகளை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் குரு பாலாஜி

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22