மனிதர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளில் கணவன்- மனைவி எனும் உறவு முதன்மையானது. போற்றத்தக்கது. புனிதமானது. இந்த உறவுகளில் இருந்து தான் மகன்- மகள் எனும் வாழ்க்கைக்கான பற்றுக்கோட்டை உருவாக்கும் வாரிசுகள் உருவாகிறார்கள்.
இந்த தருணத்தில் வெவ்வேறு சூழல் மற்றும் பின்னணியில் வளரும் ஆணும், பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்து, இல்லற வாழ்க்கையை தொடங்கும் போது.. அதில் புரிதல் என்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
கணவன் அல்லது மனைவி.. இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ லக்னாதிபதி பலவீனமடைந்திருந்தால்... அவை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பலவீனமடைந்திருந்தால்... அவர்களுடைய இல்லற வாழ்வில் தான் கணவன் -மனைவி இடையேயான பிரச்சனை- சிக்கல்- எழுகிறது. கணவன் - மனைவி உறவை நீட்டிப்பதற்கு பல தருணங்களில் பல சூட்சமங்களை கையாள வேண்டியதிருக்கும்.
இது தொடர்பாக எம்முடைய முன்னோர்கள் ஏராளமான குறிப்புகளை வழங்கியுள்ளனர். இருப்பினும் கணவன் மனைவி இடையேயான உறவு சுமூகமாக நீடிக்கும் போது தான்.. அது குடும்பத்தில் எதிரொலித்து, செல்வ நிலையை உண்டாக்கும். இதற்கான பிரத்யேக சூட்சமத்தை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வருமாறு விவரித்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : மல்லிகைப்பூ- தாமரை பூ- குங்குமப்பூ- பன்னீர்- நெய்
கிருத்திகை நட்சத்திரமும், செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையும் இணைந்து வரும் நாளில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று, அங்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு மல்லிகைப்பூ மற்றும் தாமரைப் பூவால் இணைத்து கட்டப்பட்ட மாலையை சாற்றி, இரண்டு குங்குமப்பூ குப்பிகளை சமர்ப்பித்து, கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை மகிழ்ச்சிகரமாக நீடிக்க வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
பின்னர் இறைத்தொண்டு செய்யும் ஊழியரிடமிருந்து ஒரு குங்குமப்பூ குப்பியை பெற்று, வீட்டிற்கு எடுத்து வந்து, அதனை இடித்து பன்னீர் & நெய்யுடன் குழைத்து.. நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டும்.
இதனை நீங்கள் தொடர்ந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டு வரும்போது... தம்பதிகளுக்கு இடையேயான பிணக்குகள் மாயமாக மறைந்து, இருவருக்கும் இடையே புரிதலும், அன்பும் ஏற்பட்டு, ஒன்றிணைவார்கள். அத்துடன் இந்த இணைவு வசீகரத்தை உண்டாக்கி செல்வ வளத்தை மேம்படுத்தும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM