சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘Gemini Omni’ ஏஐ வீடியோ ஜெனரேட்டரின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயனர்கள் மிக எளிதாகவும் தத்ரூபமாகவும் வீடியோக்களை உருவாக்க உதவும் இந்த Gemini Omni தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள்:
பயனர்கள் உரை , படங்கள் , குரல் அல்லது ஒலி மற்றும் வீடியோ காட்சித்துணுக்குகள் ஆகிய அனைத்தையும் ஒரே 'Prompt' மூலமாக உள்ளீடாகக் கொடுத்து வீடியோக்களை உருவாக்க முடியும்.
விவரிக்கப்படும் காட்சிகளை மிகக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வீடியோவாக மாற்றும் திறன் இதற்கு உண்டு.
Gemini Omni உருவாக்கும் வீடியோவில் திருப்தி இல்லையெனில், ஏஐ உடன் தொடர்ந்து உரையாடி (Prompts மூலம் கட்டளைகள் வழங்கி) வீடியோவில் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்துகொள்ள முடியும்.
Gemini செயலி, கூகுள் ஃபுளோ (Google Vids/Flow), யூடியூப் ஷார்ட்ஸ் ரீமிக்ஸ் மற்றும் யூடியூப் கிரியேட் ஆகியவற்றில் இத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
யூடியூப் ஷார்ட்ஸ் ரீமிக்ஸ் மற்றும் யூடியூப் கிரியேட் ஆகியவற்றில் இலவசமாகவும், Gemini செயலி மற்றும் கூகுள் ஃபுளோவில் கட்டணச் சேவையாகவும் பெற முடியும்.
360p முதல் 4K ரெசலூஷன் வரையில் உயர்தர வீடியோக்களை உருவாக்கலாம். ஆரம்பத்தில் 10 விநாடிகள் மட்டுமே வீடியோ உருவாக்க முடிந்த நிலையில், தற்போது 40 விநாடிகள் வரை வீடியோக்களை உருவாக்க முடியும்.
பயனர்கள் இதில் ஏஐ அவதார்களை உருவாக்கி, அவற்றை அடுத்தடுத்த வீடியோக்களிலும் தொடர்ச்சியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
போலி வீடியோக்களைத் தவிர்க்கும் வகையில் 'டிஜிட்டல் வாட்டர்மார்க்கிங்' அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. குறுகிய வடிவிலான வீடியோக்கள், விளம்பரங்கள் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களை உருவாக்க இது பெரிதும் உதவுகிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM