இறை அழைத்தலை ஊக்குவிக்கும் “வந்து பாருங்கள்” சிறப்பு முத்தின நிகழ்வு யாழில் ஆரம்பம்!

28 Aug, 2026 | 06:23 PM
image

யாழ்ப்பாணத்தில் இறை அழைத்தலை (குருத்துவ மற்றும் துறவற அழைப்பு) ஊக்குவிக்கும் வகையிலான "வந்து பாருங்கள்" சிறப்பு முத்தின நிகழ்வு புனித மார்ட்டினார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அடிகளாரின் ஒருங்கிணைப்பில் இன்று வெள்ளிக்கிழமை (28) தொடங்கியது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றுள்ள இந்நிகழ்வு இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் (வெள்ளிக்கிழமை - 28) : குருமட அதிபரின் வரவேற்பு மற்றும் அறிமுக நிகழ்வுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. அதனைத் தொடர்ந்து அருட்சகோதரர்களின் அனுபவப் பகிர்வும், திருக்குடும்ப அருட்சகோதரிகளினால் "வாழ்வைத் தேடல்" என்ற கருப்பொருளிலான கருத்தமர்வும் இடம்பெற்றன. 

மதிய உணவைத் தொடர்ந்து, "தொடர்பு சாதனங்களின் சாதக பாதக விளைவுகள்" எனும் தலைப்பில் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் கருத்துரை வழங்கினார்.

இரண்டாம் நாள் (சனிக்கிழமை -  29): திருப்பலியைத் தொடர்ந்து "குருத்துவத்தை நோக்கிய வழிகாட்டல்" எனும் தலைப்பில் அருட்தந்தை I.S. விஜேந்திரன் (அமதி) அடிகளாரின் வழிகாட்டல் இடம்பெறவுள்ளது. 

மேலும் "இறை அழைத்தல்" தொடர்பாக அருட்தந்தை T. குயின்சன் பெர்னாண்டோ அடிகளார் மற்றும் அருட்தந்தை F. டினேசன் அடிகளார் ஆகியோரின் கருத்தமர்வுகளும், அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறவுள்ளன.

இறுதி நாள் (ஞாயிற்றுக்கிழமை - 30): குருமட அதிபருடனான சந்திப்பு மற்றும் குழுக்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து "இறை அழைத்தலை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு" என்ற தொனிப்பொருளில் அருட்தந்தை M. டேவிட் அடிகளார் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07