எம்மில் சிலருக்கு தொடர் இருமல் பாதிப்பு ஏற்படும். சிலருக்கு வேலைகளில் தீவிரமாக மூழ்கி இருக்கும் தருணங்களில் இருமல் உண்டாகும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பல்னரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவதானிக்க வேண்டும்.
இத்தகைய அரிய பாதிப்பிற்கு தற்போது நவீன முறையிலான நிவாரண சிகிச்சைகள் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
நெஞ்சு வலி, தொடர் இருமல், இருமல், இருமலின் போது சிறிதளவு குருதியுடன் சளி வருவது, விரல் நகங்கள் மற்றும் தோலில் நிறமாற்றம், சோர்வு, காய்ச்சல், உடல் எடை குறைவு ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இதற்கு உடனடியாக முழுமையான சிகிச்சையை பெறாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
நுரையீரலில் உள்ள காற்றுப்பைகளில் புரதங்கள் இயல்பான அளவைவிட அதிக அளவில் தேக்கம் அடைவதால் காற்று இயல்பாக செல்வதில் தடை ஏற்படுகிறது. நுரையீரலில் உள்ள காற்று பைகளில் புரதங்கள், கொழுப்புகள் மற்றும் ஏனைய பொருட்கள் படிவதால் ஏற்படும் அரிய நுரையீரல் பாதிப்பாகும்.
ஒரு மில்லியன் மக்களின் 30 முதல் 40 பேருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
காற்றுப்பைகள் வழியாக காற்று செல்வது தடைபடுவதால் குருதிக்கு தேவையான ஓக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.
மேலும் இத்தகைய பாதிப்பு மூன்று வகைகளில் ஏற்படக்கூடும் என்று விவரிக்கும் வைத்தியர்கள், புகை பிடிக்கும் நபர்களுக்கும் தொடர்ந்து தூசிகளையும், இரசாயனங்களையும் பணி நிமித்தம் சுவாசிக்கும் நபர்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் விவரிக்கிறார்கள். ஆனால் இது மிக குறைந்த அளவே பிறவி பாதிப்பாக ஏற்படுகிறது.
இத்தகைய அறிகுறி உள்ளவர்களுக்கு குருதியில் உள்ள ஓக்ஸிஜனின் அளவை அளவிடும் பிரத்யேக ரத்த பரிசோதனை, சீரம் பயோ மார்க்கர் பரிசோதனை, நுரையீரல் செயல்பாட்டு திறன் பரிசோதனை, நெஞ்சக எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், திசு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இத்தகைய பாதிப்பிற்கு முழு நுரையீரல் குளியல் எனும் பிரத்யேக நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள்.
இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் நோயாளிகளின் நுரையீரலை உப்பு நீர் மூலம் சுத்திகரிப்பார்கள். இந்த செயல்முறை ஐந்து மணி நேரம் வரை நீடிக்கும்.
சிலருக்கு நுரையீரலின் இரண்டு பகுதிகளிலும் ஒரே தருணங்களில் இத்தகைய நுரையீரல் குளியல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
இத்தகைய தருணத்தில் நுரையீரலில் உள்ள காற்று பைகளில் மீது படிந்திருக்கும் கொழுப்பு மற்றும் புரத படிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு, நுரையீரலில் இயக்கத்தை மீட்டெடுத்து, சுவாசத்தை இயல்பானதாக சீரமைப்பர். இதற்குப் பின்னர் வைத்தியர்கள் விவரிக்கும் அறிவுரை மற்றும் பரிந்துரையை முழுமையாக பின்பற்றினால்.. மீண்டும் இத்தகைய பாதிப்பை ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
- வைத்தியர் விகாஸ்
தொகுப்பு : அனுஷா






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM