முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் எட்டு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் வசித்துவரும் இந்தச் சிறுமி, நேற்று (14) மண்ணெண்ணெய் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். மண்ணெண்ணெய் வீட்டில் இருப்பதாகச் சொன்ன கடை உரிமையாளர், சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

பயந்துபோன அச்சிறுமி அங்கிருந்து தப்பிவந்து நடந்த விஷயத்தை அவரது தாயாருக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்படி, உடனடியாக குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட சிறுமி, மேலதிக பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.