எதிர்காலத்துக்கான அடித்தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில், LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா, பேராதனை, மொரட்டுவ மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களுடன் கைகோர்த்து எதிர்காலத்துக்கான அடித்தளத்தை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டு, பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டில் பயிலும் சிவில் பொறியியல் கற்கைகளை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு புத்தாக்கமான கொங்கிறீற் கலவை அலங்கார போட்டியொன்றை முன்னெடுத்திருந்தது.

jobs

கொங்கிறீற் கலவை அலங்காரம் எனும் விசேடத்துறையில் அறிவுசார் மற்றும் நடைமுறை அனுபவத்தை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதை நோக்காக கொண்டு இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கொங்கிறீற் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் தொடர்பான முகாமையாளர் பொறியியலாளர் துஷார பிரியதர்ஷன கருத்து தெரிவிக்கையில்,

“இந்த போட்டிகள் 2015 ஜுலை முதல் ஒக்டோபர் மாதம் வரை பேராதனை, மொரட்டுவ மற்றும் றுகுணு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றன. இவற்றை ஹொல்சிம் லங்கா மற்றும் பல்கலைக்கழகங்களின் சிவில் பொறியியல் சங்கங்கள் ஆகியன முன்னெடுத்திருந்தன.

கொங்கிறீற் கலவை அலங்காரம் தொடர்பான பயிற்சிப்பட்டறைகளுடன் இந்த போட்டி ஆரம்பமாகியிருந்தது. இதில் கலவை அலங்காரம் தொடர்பான பிரயோகம் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

பயிற்சிகளின் போது ஆளுமைகள் மற்றும் அறிவு ஆகியன மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், பிரத்தியேக மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி, தொடர்பாடல்கள், தலைமைத்துவம் மற்றும் குழுநிலை செயற்பாடுகளுக்கான ஆளுமைகள் போன்றன ஊக்குவிக்கப்பட்டிருந்தன” என்றார்.

பல்கலைக்கழக சிவில் பொறியியல் சங்கங்களின் மூலமாக முன்னெடுக்கப்பட்டிருந்த போட்டிகளில் பங்குபற்றியிருந்த மாணவர்கள் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த பிரேரணைகளை சிவில் பொறியியல் திணைக்களம் மற்றும் ஹொல்சிம் லங்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் மூலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் பங்குபற்றல் என்பதன் மூலமாக, அவர்களுக்கு இது வெற்றிகரமான மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது. 

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கொங்கிறீற் கலவை அலங்கார போட்டியில் மூன்று பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சிறந்த ஐந்து அணிகள் போட்டியிட்டிருந்ததுடன், வெற்றியீட்டிய அணிக்கு மலேசியாவிலுள்ள LafargeHolcim நிலையத்தையும் சிங்கப்பூரிலுள்ள சிறப்பு நிலையத்தையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது. 

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன், ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது.  இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. “இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திவாரங்களை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.