பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் ராகு தோஷம் அல்லது கேது தோஷம் இருந்தால்... அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற வருவாய் கிடைக்காது. கிடைத்தாலும் அவை முழுமையாக கிடைக்காது. முழுமையாக கிடைத்தாலும் அதிலிருந்து ஒரு ரூபாயையும் சேமிக்க இயலாது.
இதனால் எம்மில் பலரும் ராகு -கேது தோஷங்களை நீக்கிக் கொள்வதற்கு முதன்மையான முக்கியத்துவம் வழங்குகிறார்கள்.
அதிகம் குறிப்பாக பிரம்மாண்டத்தை குறிக்கும்... வளர்ச்சியை ஊக்குவிக்கும்... நிழல் கிரகமான ராகு தோஷம் இருந்தால்... அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் இதற்கான பிரத்யேக வழிபாட்டையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்குத் தேவையான பொருட்கள்: ஒரு தலை வாழை இலை, முழு கருப்பு உளுந்து, பித்தளையாலான கலசம் , வாழைப்பூ ,தேங்காய்-பழம் உள்ளிட்ட வழக்கமான பூஜை பொருட்கள், அருகம்புல்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையான நாலரை மணிக்கு மேல் உங்களது வீட்டின் பூஜையறையில் தலைவாழை இலையை விரித்து, அதன் மீது முழு கருப்பு உளுந்தை பரப்பி, அதன் மீது பித்தளையாலான கலசத்தை வைத்து, கலசத்தின் மீது ஒரு வாழை பூவை இடம்பெறச் செய்ய வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பூஜை பொருட்களுடன் 108 என்ற எண்ணிக்கையிலான அருகம்புல்லை வைத்துக்கொண்டு, ராகு பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
இதற்குப் பிறகு பூஜையை ராகு காலம் முடிவடைவதற்குள் நிறைவு செய்துவிட்டு, கலசத்தில் உள்ள புனித நீரை வீடு முழுவதும் தெளித்திட வேண்டும். வாழைப்பூவை பசு மாட்டிற்கு உணவாக வழங்கிட வேண்டும். முழு கருப்பு உளுந்தை ஓடும் நதிநீரில் விட்டு விட வேண்டும். இதனை ஒரு முறை செய்தால்... உங்களுடைய ராகு தோஷம் விலகி, ராகுவின் சுப பலன் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM