பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான இ20 போட்டியை பாகிஸ்தானின் லாகூரில் நடத்த வேண்டாம் என இலங்கையின் நாற்பது வீரர்கள் கடிதம் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒக்டோபர் 29ஆம் திகதி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இந்தப் போட்டியில் விளையாட, இலங்கை அணியை அனுப்பச் சம்மதிப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.

எனினும், கிரிக்கெட் வீரர்களின் இந்தக் கோரிக்கையால், போட்டியை லாகூரில் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளது.

திங்களன்று இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்த தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.