கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா  செலவில் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகத் திறந்துவைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால்  சற்றுமுன்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் ஹர்சன், பாராளுமன்ற  உறுப்பினர்களான அங்கையன், மஸ்தான், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பொலிஸ்மா அதிபர், அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.