இந்த வருடத்துக்கான 1333 பைக்அதொன் (Bikeathon) நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளராக சிசிசி ஃபவுண்டேஷனுடன் ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் இணைந்துள்ளது.
இதன் மூலம் இலங்கை முழுவதும் மனநல நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வையும் 1333 மனநல உதவித் தொலைபேசி சேவை குறித்த அறிவையும் அதிகரிக்கும் ஃபவுண்டேஷனின் முயற்சிகளுக்கு ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் ஆதரவு வழங்குகிறது.
தொடர்ச்சியான 13ஆவது வருடமாக நடைபெறும் 1333 பைக்அதொன் நிசழ்ச்சி 13 நகரங்கள் வழியாக 1333 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்கும் சைக்கிளோட்டப் பயணமாக அமையவுள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரி 100 கிலோ மீற்றர் பயணமாக இது அமையும்.
இந்தப் பயணம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நாளைமறுதினம் 29ஆம் திகதி ஆரம்பமாகி உலக தற்கொலைத் தடுப்பு தினத்தனமான செப்டம்பர் 10ஆம் திகதி மீண்டும சுதந்திர சதுக்கத்தில் நிறைவடையும்.
பயணத்தின் போது, சைக்கிளோட்டிகள் பல்வேறு சமூகங்களுடன் இணைந்து, மனநலம், தற்கொலைத் தடுப்பு மற்றும் 1333 உதவித் தொலைபேசி சேவையின் மூலம் கிடைக்கக்கூடிய சேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
'பங்காளித்துவத்தை அர்த்தமுள்ளதாக்குங்கள்' என்ற செய்தியின் மூலம் இந்த நிகழ்ச்சி இவ் வருடம் நடத்தப்படுகிறது. சிறியதாகத் தோன்றும் ஒவ்வொரு செயல்பாடும் ஒரு முக்கியமான சமூக நோக்கத்தின் தாக்கத்தை விரிவுபடுத்த உதவும் என்பதை நினைவூட்டுவதே இந்தச் செய்தியின் நோக்கமாகும்.
இந்தப் பிரசாரத்தின் மூலம் சைக்கிளோட்டிகளுக்கு ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் ஆதரவளிப்பதுடன், உதவித் தொலைபேசி சேவை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், மக்கள் தங்களது சொந்த நல்வாழ்வையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் நல்வாழ்வையும் சிந்திக்கவும் ஊக்குவிக்கும்.
'சிசிசி ஃபவுண்டேஷன் மற்றும் 1333 பைக்அதொன் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பது, சமூகப் பிரச்சினைகளை அர்த்தமுள்ள வகையில் அணுகுவதிலும், தாங்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கு பங்களிப்பதிலும் நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என்ற எங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது' என ஏய்ட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவரான ஸ்டஷானி ஜயவர்தன தெரிவித்தார்.
'மனநல நல்வாழ்வு என்பது ஆரோக்கியமானதும் நிறைவானதுமான வாழ்க்கையின் அத்தியாவசியமான ஒரு பகுதியாகும். இருப்பினும், பல சமூகங்களில் அது தொடர்பான உரையாடல்கள் இன்னும் போதியளவில் இடம்பெறுவதில்லை. மேலும், சிலருக்கு மனநலம் தொடர்பான விடயங்களைப் பற்றி பேசுவதில் நிலவும் சமூகக் களங்கம் உண்மையான தடையாக உள்ளது.
'1333 பைக்அதொன் என்பது, உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நிறைவேற்றப்படும் ஒரு பயணமாகும். இது சிந்தனை, தொடர்பு மற்றும் புத்துணர்வுக்கான இடத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை நினைவூட்டும் ஒரு வலுவான முயற்சியாகும். பங்காளித்துவத்தை அர்த்தமுள்ளதாக்குங்கள் என்ற எங்களது செய்தியின் மூலம், மனநல நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், பகிரங்க மற்றும் அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவிக்கவும், உதவியை நாடுவதற்கு மக்களைத் தூண்டவும், இந்த முக்கியமான செய்தியைச் சுமந்து செல்லும் சைக்கிளோட்டிகளுக்கு ஆதரவாக இலங்கை முழுவதிலும் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கவும் நாங்கள் விரும்புகிறோம்' என அவர் மேலும் கூறினார்.
ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், விருந்தோம்பல் என்பது விருந்தினர்களுக்காக உருவாக்கப்படும் அனுபவங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை. அந்த நிறுவனத்தின் ஹோட்டல்கள் இயங்கும் பகுதிகளுடன் தொடர்புடைய மக்களுக்கும் சமூகங்களுக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதும் விருந்தோம்பலின் ஒரு பகுதியாகும்.
சிசிசி ஃபவுண்டேஷன் உடனான இந்தப் பங்காளித்துவம், பரந்து சென்றடையும் விருந்தோம்பல் துறையின் திறனையும், கூட்டு நடவடிக்கையின் வலிமையையும் ஒன்றிணைத்து, நாடு முழுவதும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை பாதிக்கும் ஒரு முக்கியமான விடயத்திற்கு ஆதரவளிக்கும் ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இலங்கையர்கள், பயணிகள், சமூகங்கள் மற்றும் பங்காளிகள் அனைவரையும் 1333 பைக்அதொன் நிகழ்வுக்கு ஆதரவளிக்குமாறு ஹெரிட்டன்ஸ் ஹொட்டெல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் அழைக்கிறது. ஒவ்வொரு கிலோ மீற்றரும், தொடங்கப்படும் ஒவ்வொரு உரையாடலும், பகிரப்படும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஆதரவு கிடைக்கிறது என்பதை உணரச் செய்ய உதவும்.

(என்.வீ.ஏ.)






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM