1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாம் 30 வருட கொடிய  யுத்தம்  காரணமாக  பாரிய  பின்னடைவை சந்தித்துள்ளோம். இனிமேலும் இந்த நிலை தொடரக்கூடாது என்று உயர் கல்வி  மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல யாப்பா தெரிவித்துள்ளார்.

இன்று காலை மட்டக்களப்பில் உயர்தொழில் நுட்பவியல் நிறுவனம் அமைச்சார் லக்ஸ்மன் கிரியல்ல இன்று திறந்து வைக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்த அரசியலமைப்பில் அனைத்து சமூகத்துக்கும் நன்மை ஏற்படும் விதத்தில்தான்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியமைப்பு உருவாக்குவதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இனம், மதம் பேதம் பாராமல் எல்லோருக்கும் நன்மையே இதில் உள்ளடக்கப்படுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் எமக்கு சர்வதேச மட்டத்தில் நல்ல பெயர் இருக்கவில்லை தற்போது இருக்கும் இந்த அரசாங்கத்துக்கு பல உதவிகளை வழங்குவதற்கு வெளிநாடுகள் முன்வந்துள்ளது.

திருகோணமலையில் யப்பான் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை  முன்னெடுத்து  வருகின்றது. அதுபோன்று இந்தியா அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளது சீனர்களும் எமக்கு உதவி செய்கின்றனர்.

இன்று கிழக்கு மாகாணத்தில் 37 பாரிய சுற்றுலா விடுதிகள்  அமைக்கபட்டுள்ளது. இதன் மூலமாக பத்தாயிரம் பேருக்கு வேலை  வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். கிழக்கு மாகாணத்துக்கு மிக விரைவில் அதிவேக நெடுஞ்சாலை பாதை போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பெண்களுக்கும் அரசியலில் சந்தர்ப்பம் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்,  பெண்கள் வரமாட்டார்கள் என்று பயந்தோம் ஆனால் இன்று அதற்கு எதிர்மாறாக முண்டியடித்துக்கொண்டு வருகின்றார்கள்.  

வருகின்ற தேர்தலில் நல்லவர்களை தெரிவு செய்யுங்கள் தற்போது உள்ள இந்த நல்லாட்சி அரசாங்கம்  பல முறையிலும்  வடக்கு கிழக்குக்கு அபிவிருத்தியில்  முன்னுரிமை வழங்கி கொண்டு இருக்கின்றது.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டி எழுப்பவேண்டும் ஆகவே வருகின்ற தேர்தலில் வெற்றியோ தோல்வியோ எமது நாட்டின் நலன் கருதி நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

இந்த நிகழ்வுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள்  பொலிஸார் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.