இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டுப் படகுகளுக்கான அபராதத்தை 150 மில்லியன் ரூபாவாக உயர்த்தப்படவுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று (14) ஆரம்பமாகியிருக்கும் உயர்மட்ட மீன்பிடித்துறையினரின் பேச்சுவார்த்தைகளில் இது குறித்துக் கலந்துரையாடப்படும் எனவும், அதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டதும் இந்த புதிய அபராதத் தொகை அமுல்படுத்தப்படும் எனவும் மீன்பிடித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.