அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  காந்தி  பூங்காவிற்கு முன்பாக தமிழ் தேசிய  மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள், சமூகநலன் சார்ந்தவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.