பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில் ஏற்படும் ரத்த நாள அடைப்பு பாதிப்பிற்கான சிகிச்சை

26 Aug, 2026 | 04:35 PM
image

எம்மில் சிலர் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சிறிது தூரம் நடந்தவுடன் காலில் வலி ஏற்படுவதையும், அதன் பிறகு சற்று ஓய்வெடுத்தால் கால் வலி குறைவதையும் உணர்ந்திருப்பார்கள். கால் வலிக்கான காரணங்களில் மருத்துவ மொழியில் பெரிபெரல் அர்டரி டிஸீஸ் என குறிப்பிடப்படும் கால் ரத்த நாள அடைப்பு பாதிப்பும் ஒன்றாகும். பொதுவாக எம்மில் பலரும் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும் என்பதை அறிந்திருப்போம். அதே தருணத்தில் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏதேனும் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதனை பக்கவாதம் என்றும் அறிந்திருப்போம். ஆனால் காலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால்... அதைப்பற்றி நாம் அதிகம் தெரிந்து வைத்திருப்பதில்லை. இது குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விவரிக்கிறார்கள்.

கை மற்றும் கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்களிலும் கொழுப்பு படிவங்களால் இரத்த நாள அடைப்பு பாதிப்பு ஏற்படும். நடக்கும் போதும் அல்லது மாடிப்படிகளில் அல்லது வேறு இடத்தில் இயங்கும் போதும் கால்களில் ஏற்படும் வலி மற்றும் சோர்வு, கால்களில் ஏற்படும் சிறிய அளவிலான காயங்கள் கூட ஆறுவதற்கு அதிக கால தாமதம், கால்களில் உள்ள முடி மற்றும் நகங்களின் வளர்ச்சி குறைவது.... ஆகியவை இத்தகைய பாதிப்பின் அறிகுறியாக அவதானிக்கலாம்.

இத்தகைய பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிய இயலும். காலில் வலி ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்து பாதிப்பினை விவரித்தால் அவர்கள் கணுக்கால் பிராச்சியல் இன்டெக்ஸ் என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பிரத்யேக பரிசோதனை மேற்கொள்வார்கள். இந்த பரிசோதனை மூலம் கணுக்கால்களில் உள்ள ரத்த அழுத்தத்தை ஒப்பிட்டு பார்த்து, கால்களில் உள்ள ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை அவதானிப்பார்கள். காலில் உள்ள ரத்த நாளங்கள் சுருக்கமடைந்து விட்டதா..? அல்லது அடைப்புகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதனை இத்தகைய பரிசோதனை உதவுகிறது. அத்துடன் கால்களில் நடைபெறும் ரத்த ஓட்டம் குறித்த அளவீடுகளையும் இத்தகைய பரிசோதனை மதிப்பிடுகிறது.

சிலருக்கு இத்தகைய பரிசோதனை சாதாரண முறையில் தரையில் நடக்கும் போதும்.... ட்ரெட்மில் எனப்படும் உடற்பயிற்சிக்கான கருவிகளில் நடக்கும் போதும்... என இரு வேறு தருணங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு, உயர் குருதி அழுத்தம், புகையிலை பாவனை, அதீத கொழுப்பு, அதிரோஸ்கிளிரோசிஸ் எனப்படும் நோய்குறி.. ஆகிய காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என விவரிக்கிறார்கள்.

சிலருக்கு இதை தொடர்ந்து டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை, சி டி ஓஞ்சியோகிராம் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சை மற்றும் பிரத்யேக சிறிய அளவிலான சத்திர சிகிச்சைகள் மூலமாக முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் அறிவுரை மற்றும் வாழ்க்கை நடைமுறையை முழுமையாக பின்பற்ற வேண்டியதிருக்கும்.

வைத்தியர் அருணாச்சலம் வகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இதய நோயாளிகளுக்கு நிவாரணம் தரும் நவீன...

2026-10-10 17:17:40
news-image

உலக மனநல தினம் இன்று

2026-10-10 16:59:52
news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44
news-image

குடல் அட்டாக் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2026-10-03 16:01:44
news-image

நுண் இரத்த நாள அடைப்பை கண்டறியும்...

2026-10-02 15:16:19
news-image

ரைனோஸ்கிளிரோமா எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-10-01 16:18:03
news-image

மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2026-09-30 16:23:33
news-image

ஹைட்ரோநெஃப்ரோஸிஸ் எனும் சிறுநீரக பாதிப்பிற்குரிய நவீன...

2026-09-29 14:05:06