எம்மில் பலரும் தங்களது வீடுகளில் செல்வ செழிப்பு நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வதை வழக்கப்படுத்திக் கொண்டிருப்போம்.இந்த தருணத்தில் மகாலட்சுமி வழிபாட்டில் இடம்பெற வேண்டிய சில சூட்சமமான குறிப்புகளை எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கியுள்ளனர்.
மகாலட்சுமி வழிபாட்டின்போது ஆன்மீகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் கிடைக்கும் வெள்ளியால் தயாரிக்கப்பட்ட சாமுத்திரிகா லட்சணத்துடன் கூடிய அம்பிகையின் முக உருவத்தை பூஜையில் இடம்பெறச் செய்வர்.
இத்தகைய அம்பிகையின் உருவத்தை மகாலட்சுமி வழிபாட்டின்போது இடம்பெறச் செய்வதன் மூலம் செல்வ வளத்தை தங்கு தடையின்றி மேம்படுத்திக் கொள்ளலாம்.
சிலருக்கு இதனைப் பயன்படுத்துவதில் பொருளாதார ரீதியான சிக்கல்கள் இருந்தால், எம்முடைய வழக்கத்தின்படி தேங்காய் ஒன்றை வாங்கி, அதில் முழுமையாக மஞ்சளைப் பூசி, அதில் கண் மற்றும் முகத்தை வரைந்து அதனையும் வழிபாட்டில் இடம்பெறச் செய்யலாம். இப்படி செய்தாலும் மகாலட்சுமி வழிபாடு பூரணமாகும்.
ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நெகிழியில் தயாரிக்கப்பட்ட அம்பிகையின் உருவத்தைப் பயன்படுத்தக் கூடாது. இவை எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும்.
வெள்ளியால் தயாரிக்கப்பட்ட அம்பிகையின் முகத்தை மகாலட்சுமி வழிபாட்டில் இடம்பெறச் செய்தால், சுக்கிரன், ராகு, சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையாக இவை இருப்பதால், இதனை வழிபடும்போது உங்களுடைய ஜாதகத்தில் இரண்டாம் பாவம் இயங்கி தன வரவை அதிகரிக்கிறது.
குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சியும் அமைதியும் நீடிக்க வைக்கிறது.
இத்தகைய வெள்ளியால் தயாரிக்கப்பட்ட அம்பிகையின் உருவத்தை, வசீகரமான பொலிவையும் தோற்றத்தையும் நாளாந்தம் நாம் தரிசிக்கும்போது, புறக் காரணிகளால் எம்மில் ஆக்கிரமித்திருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகுகின்றன. முக வசீகரமும் முகப்பொலிவும் ஏற்பட்டு, அதனூடாக வெற்றி சாத்தியமாகும்.
குறிப்பாக நாம் கடனில் சிக்கித் தவிக்கும் போது முகப்பொலிவில் மாற்றம் ஏற்படும். பற்களில் பிரச்சினை உண்டாகும்.
சிரிப்பதற்கும் மறந்து விடுவோம். இத்தகைய தருணங்களில் நாம் மகாலட்சுமி வழிபாட்டை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமல்லாமல் நாளாந்தமும் மேற்கொண்டால், இத்தகைய சிக்கல்களில் இருந்து விடுபடுவதுடன் முகத்தில் பொலிவும் புன்னகையும் நிரந்தரமாகும்.
தொகுப்பு: சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM