ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பிரதேசமான குணார் மாகாணத்தில், அமெரிக்க ‘ட்ரோன்’கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை நடத்துவது குறித்து நேற்று முன்தினம் (12) ஐ.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் அல்லர் என்றும், அப்பாவிப் பொதுமக்களே என்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஷாஸதா ஷாஹித் குற்றஞ்சாட்டியுள்ளார்.