பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் முதல் எம்முடைய வீடுகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மூத்த உறுப்பினர்கள் வரை தங்களது வங்கிக் கணக்கில் சேமிப்பு என்பது நாளாந்தம் உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள்.
ஆனால் அதற்கான சாத்தியம் என்பது அவர்களின் உழைப்பையும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையையும் பொறுத்து அமைகிறது. எம்மில் சிலருக்கு நாளாந்தம் குறிப்பிட்ட தொகை வருவாயாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
ஆனால் அதிலிருந்து ஒரு ரூபாயையும் சேமிக்க இயலாத நிலை நீடிக்கும். அதேபோல் வேறு சிலருக்கு தனவரவு தங்குதடையின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
இவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக வழிமுறைகளைக் கற்பித்திருக்கிறார்கள். இதனை உறுதியான நம்பிக்கையுடன் பின்பற்றும்போது, தனவரவு ஏதேனும் புதிய வழிகளில் உண்டாகும்.
இதற்குத் தேவையான பொருட்கள்: சதுர வடிவிலான சிவப்பு வண்ண பருத்தித் துணி, குங்குமப்பூ, துளசி இலை.
ஒரு சதுர வடிவத்திலான பருத்தியால் தயாரிக்கப்பட்ட சிவப்பு வண்ணத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு குங்குமப்பூவையும், ஒரு துளசி இலையையும் வைத்து, முடிச்சிட்டு, அதனை எப்போதும் உங்களுடைய சட்டைப் பைகளில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
இவை சுக்கிரனின் அம்சத்தை பிரபஞ்சத்தில் இயங்கச் செய்து, உங்களுக்கு ஏதேனும் புதிய வகையில் தனவரவை ஏற்படுத்தும். இதனைத் தொடர்ந்து 43 நாட்கள் பயன்படுத்த வேண்டும்.
இத்தகைய தருணத்தில் நாளாந்தம் துளசி இலையை மட்டும் புதிதாக மாற்றி முடிச்சிட்டு உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM