கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திரசிகிச்சை

25 Aug, 2026 | 04:33 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், குறிப்பாக உணவுப் பழக்கவழக்கத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வயிறு சார்ந்த உறுப்புப் பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பை சீராக்க தற்போது விப்ள் செயல்முறை எனும் புதிய மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் கூடிய சத்திரசிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கணையம், சிறுகுடல், பித்த நாளங்கள் ஆகியவற்றில் தீங்கற்ற கட்டிப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அல்லது புற்றுநோய் கட்டிப் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனை அகற்ற சத்திரசிகிச்சை அவசியமாகிறது.

இத்தகைய தருணத்தில் முழுமையான நிவாரணம் அளிக்கும் வகையில் விப்ள் செயல்முறை என்ற நவீன வடிவிலான சத்திரசிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.

இத்தகைய சத்திரசிகிச்சை மிகவும் சிக்கலானது மற்றும் பக்கவிளைவுகளைக் கொண்டது. கணையத்தில் டிஸ்டல் பான்கிரியாடெக்டமி, டோட்டல் பான்கிரியாடெக்டமி, பித்த நாளத்தை அகற்றும் சத்திரசிகிச்சை ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே அமர்வில் மேற்கொள்ளப்படும் நுட்பமான சத்திரசிகிச்சையாகும்.

இத்தகைய தருணத்தில் கணையம், பித்த நாளம், சிறுகுடலின் முன்பகுதியான டியோடினம் ஆகியவற்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகைய சத்திரசிகிச்சைகள் மூலம் கணைய புற்றுநோய், கணைய நீர்க்கட்டிகள், கணைய கட்டிகள், கணைய வீக்கம், பித்த நாள புற்றுநோய், நாளமில்லா நரம்பியல் சுரப்பிக் கட்டிகள், சிறுகுடல் புற்றுநோய், கணையம் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் காயங்கள், பித்த நாளங்களில் ஏற்படும் கட்டிகள் ஆகியவற்றை அகற்ற இத்தகைய சத்திரசிகிச்சை தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய சத்திரசிகிச்சை நான்கு மணி முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். இத்தகைய தருணத்தில் குறைந்தபட்ச ஊடுருவல் நுட்பங்களையும் வைத்திய நிபுணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக பக்கவாட்டிலும் முதுகிலும் பரவும் வயிற்றுவலி, பசியின்மை, குமட்டல், திடீர் எடை குறைவு, சிறுநீர் நிறமாற்றம், நீரிழிவு பாதிப்பு, கை மற்றும் கால்களில் வீக்கம், தோல் அரிப்பு, ரத்தக் கட்டிகள் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் கணையம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அவதானித்து வைத்தியர்களை சந்திக்க வேண்டும்.

வைத்தியர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து அதற்குரிய சிகிச்சையை முழுமையாகவும் நிறைவாகவும் பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.



வைத்தியர் செந்தில்
தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விழித்திரை பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2026-10-16 14:17:33
news-image

அர்ட்டிகேரியா எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-10-15 14:25:51
news-image

சிஸ்டிக் பாராதைரொய்ட் அடினோமா எனும் பாதிப்பிற்குரிய...

2026-10-14 15:03:15
news-image

இடுப்பு மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை

2026-10-13 17:31:05
news-image

ஒஸ்டியோட் ஒஸ்டியோமா எனும் கட்டி பாதிப்பிற்குரிய...

2026-10-12 13:59:47
news-image

இதய நோயாளிகளுக்கு நிவாரணம் தரும் நவீன...

2026-10-10 17:17:40
news-image

உலக மனநல தினம் இன்று

2026-10-10 16:59:52
news-image

நான் கேரியஸ் லீஸன்ஸ் எனும் பற்களில்...

2026-10-09 14:31:07
news-image

டெஸ்டிகுலர் டோர்ஷன் எனும் விதைப் பையில்...

2026-10-08 17:25:50
news-image

பீடியாட்ரிக் ஓர்தோபீடிக் கிளப்ஃபுட் எனும் பிறவி...

2026-10-07 16:28:17
news-image

செல்லுலிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய நவீன...

2026-10-06 15:58:41
news-image

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி கண் பாதிப்பு...

2026-10-05 12:16:44