செங்கலடியில் இயங்கிவரும் தனியார் வங்கிக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் இருந்து, ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான நெல்லைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடன் ஒன்றுக்குப் பிணையாக இந்த நெல் மூட்டைகள் வங்கியின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

முப்பத்தைந்து வயதான ஏறாவூர் வர்த்தகர் நேற்று (13) மாலை கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றில் முன்னிறுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.