கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்காக புதிதாய் வடிவமைக்கப்படும் சித்திரத் தேர் - முதற்கட்டமாக அடிச்சட்டத்துக்கு விசேட அபிஷேகம்

24 Aug, 2026 | 05:52 PM
image

(புளியந்தீவு நிருபர்)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்துக்காக அமைக்கப்படவிருக்கும் புதிய அலங்கார சித்திரத் தேரின் அடிச்சட்டத்துக்கு விசேட அபிஷேகம் நடத்தும் நிகழ்வு  ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் வண்ணக்கர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜையுடன் ஆரம்பமானது. 

அமையப்பெறவுள்ள சித்திர தேருக்கான ஆரம்ப நிகழ்வாக தேருக்கான அடிச்சட்டத்துக்கு விசேட அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, தேருக்கான அனுசரனையாளர்களான கோயில் போரதீவைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினரால் ஆலய அறங்காவலர்களிடம் தேரின் அடிச்சட்டம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேரினை வடிவமைக்கவுள்ள சிற்பாச்சாரி  சந்திரமோகன் உள்ளிட்ட சிற்பாச்சாரியார் குழுவினர் தேருக்கான முதற்கட்ட பணியினை ஆரம்பித்துவைத்தனர்.

இப்பூஜை நிகழ்வுகளில் மார்க்கண்டு நேசராசா குடும்ப உறுப்பினர்கள், பிரபல தொழிலதிபரும் தேசியஜோதி Dr.பீ.நல்லரெத்தினம், வெல்லாவெளி பிரதேச செயலாளர், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், செயலாளர் வண்ணக்கர் சி.கங்காதரன், பொருளாளர் வண்ணக்கர் ச.கோகுலகிருஷ்ணன்,  ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள், பக்தர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

“ஈழ மணித்திருநாடு” என்று அழைக்கப்படும் இலங்கை தேசத்தின் கிழக்கிழங்கையின் “தேரோடும் ஆலயம்” என்று வர்ணிக்கப்படும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் சித்திரத் தேர் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக காணப்படுவதனால் குறித்த சித்திரத் தேருக்கு பதிலான புதிய தேரினை சுமார் 3 கோடி ரூபாய் செலவில் மட்டக்களப்பு கோயில் போரதீவைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினர் முழு அனுசரனையினை வழங்கியுள்ளனர்.

அதேவேளை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தினை பூரண கருங்கல்லினாலான ஆலயமாக மாற்றி அமைக்கும் பணிகள்  மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரதமரின் தலைமையில் நடைபெற்ற 37ஆவது சரசவிய...

2026-09-10 16:06:31
news-image

2026ஆம் ஆண்டிற்கான இலவச Education USA...

2026-09-10 17:37:33
news-image

நல்லூர் மஹோற்சவத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற...

2026-09-09 15:56:00
news-image

67ஆவது அரச இலக்கிய விருது விழா...

2026-09-09 14:04:59
news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07