எம்மில் பலருக்கும் முதுகு வலி என்பது இயல்பாக ஏற்படக்கூடியது. சிலருக்கு சாதாரண சிகிச்சைகள் மூலமாக முழுமையான நிவாரணம் கிடைக்கும். ஆனால் சிலருக்கு பிரத்யேக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலமாகவே முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
இத்தகைய தருணத்தில் வைத்திய நிபுணர்கள் முதுகு தண்டுவட பாதிப்பிற்கான சிகிச்சையில் பைபோர்டல் எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜேரி ( Biportal Endoscopic Spine Surgery) எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக அசௌகரியத்தை அளித்து வரும் கால் வலி, இடுப்பு வலி இத்தகைய அறிகுறிகளை துல்லியமாக அவதானித்தால், இவை எம்முடைய முதுகெலும்பு தண்டுவடத்திலிருந்து கால் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு பகுதிகளுக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்.
இதற்கு சிகிச்சை நுட்பமானது. வீரியமானது. துல்லியமானதாக மேற்கொள்ள வேண்டிய நிலை.
இதனால் தற்போது நவீன தொழில்நுட்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பைபோர்டல் எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு முதுகுத் தண்டின் ஒரு பக்கத்தில் இரண்டு துளைகளை சிறிய அளவில் உண்டாக்கி அதனூடாக கருவிகளையும், கமெராவையும் பொருத்தி, நுட்பமான மற்றும் சிக்கலான நரம்பியல் பிரச்சனைகளுக்கு சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காண்பது தான் இத்தகைய நவீன சத்திர சிகிச்சையின் முதன்மையான நோக்கமாகும்.
இத்தகைய நவீன சத்திர சிகிச்சையை பாவிக்கும்போது நோயாளிகளுக்கு வலி குறையவும் சிறிய தழும்புகள் விரைவான மீட்பு நிலை குறைந்த தொற்று ஆபத்து குறைவான பக்க விளைவு என பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் நோயாளிகள் தற்போது தங்களது முதுகு தண்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை நீக்க, இத்தகைய நவீன சத்திர சிகிச்சையை நாடுகிறார்கள்.
முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால்... கடந்த தசாப்தங்களில் திறந்த நிலை சத்திர சிகிச்சை - அதற்குப் பின் குறைந்தபட்ச ஊடுருவல் மூலமாக சத்திர சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது அறிமுகமாகி இருக்கும் பை போர்டல் எண்டோஸ்கோபிக் முதுகுத்தண்டு சத்திர சிகிச்சை முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது.
முதுகு தண்டுவடம் மட்டுமல்லாமல் இடுப்பு எலும்பு மூட்டு தேய்மானத்திற்கும் இத்தகைய சத்திர சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM