இஸ்­ரே­லுக்கு எதி­ரான உணர்­வு­க­ளுடன் தொடர்ந்து செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் கல்வி, விஞ்­ஞான, கலா­சார அமைப்பை (யுனெஸ்கோ) குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்கும் அமெ­ரிக்கா அதி­லி­ருந்து வெளி­யே­று­வ­தாக நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை அறி­வித்­தி­ருக்­கி­றது.

பலஸ்­தீ­னத்­துக்கு முழு­மை­யான உறுப்­பு­ரி­மையை 2011 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ வழங்­கி­யி­ருந்­தது.  பலஸ்­தீ­னத்­துக்கு அத்­த­கைய அந்­தஸ்தை கொடுத்த  முதல் ஐ.நா. அமைப்பு என்றால் அது யுனெஸ்­கோதான் அதற்­குப்­பி­றகு அமெ­ரிக்கா யுனெஸ்­கோ­வுக்கு நிதி­யு­தவி செய்­வதை நிறுத்திக் கொண்­டது. அமெ­ரிக்­காவின் வெளி­யேற்றம் 2018 டிசம்பர் 13 ஆம் திக­தி­யி­லி­ருந்து  நடை­மு­றைக்கு வரும். அது­வரை யுனெஸ்­கோவில்  முழு­மை­யான உறுப்­பு­ரிமை கொண்ட நாடாக தொடர்ந்தும்  அமெ­ரிக்கா இருக்கும். 

அமெ­ரிக்­காவின் தீர்­மா­னத்தை நேற்று முன்­தினம் காலை வெளி­யு­றவு அமைச்சர் றெக்ஸ் ரில்­லெர்சன் யுனெஸ்­கோவின் பணிப்­பாளர் நாயகம் ஐரினா  பொகோ­வா­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தினார். இது யுனெஸ்­கோ­வுக்கு பெரும் இழப்பு. ஐ.நா. குடும்­பத்­துக்கு  ஒரு இழப்பு. பன்­மு­க­வா­தத்­துக்கும் இது ஒரு இழப்பு என்று பொகோவா அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­தி­ருக்­கிறார். 

யுனெஸ்­கோவில் நிரந்­த­ர­மான அவ­தான அலு­வ­லகம்  ஒன்றை நிறு­வு­வ­தற்கு அமெ­ரிக்கா நட­வ­டிக்கை எடுக்கும்  என்று அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின்  பேச்­சாளர் ஹீதர் நோவேர்ட் கூறினார். “இந்த தீர்­மானம் மிகவும் எளி­தாக மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றல்ல. யுனெஸ்­கோவில் அதி­க­ரிக்கும் நிலு­வை­களை பற்­றிய அமெ­ரிக்­காவின் அக்­க­றை­களை இத்­தீர்­மானம்  பிர­தி­ப­லிக்­கி­றது. யுனெஸ்கோ தொடர்ந்தும் இஸ்­ரே­லுக்கு எதி­ரான உணர்­வு­க­ளுடன் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.   இந்த அமைப்பில் அடிப்­படை மாற்­றங்கள் செய்­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது என்று அவர் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.  உலக கலா­சார பாரம்­ப­ரி­யங்­களைப் பாது­காத்தல், பத்­தி­ரிகைச் சுதந்­தி­ரத்­துக்­காகப் பாடு­ப­டுதல், விஞ்­ஞான துறை­யி­லான ஒத்­து­ழைப்­பையும் கல்­வி­யையும்  மேம்­ப­டுத்­துதல் உட்­பட யுனெஸ்­கோ­வினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற முக்­கி­யத்­துவம் வாய்ந்த செயற்­பா­டு­களில் கருத்­து­க­ளையும் நோக்­கு­க­ளையும் நிபு­ணத்­து­வத்­தையும் வழங்கும் முக­மாக உறுப்­பு­ரிமை இல்­லாத அவ­தானி அந்­தஸ்தில் தொடர்ந்தும் அமெ­ரிக்கா தொடர்­பு­களைப் பேணும் என்று பொகோ­வா­வுக்கு  தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இரா­ஜாங்க திணைக்­கள பேச்­சாளர் கூறினார். 

பலஸ்­தீ­னத்தை அங்­கீ­க­ரிக்­கின்ற எந்­த­வொரு ஐ.நா. அமைப்­புக்கும் நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­வதை அமெ­ரிக்க சட்­டங்கள் தடுக்­கின்­றன. 

2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து அமெ­ரிக்கா நிதி­யு­த­வியை  நிறுத்­திய போதிலும், யுனெஸ்­கோ­வுக்கும் வாஷிங்­ட­னுக்கும் இடை­யி­லான தோழ­மையை நாம் ஆழ­மாக்­கி­யி­ருக்­கிறோம்.  அந்த தோழமை இப்­போ­தி­ருப்­பதைப் போன்று முன்னர் ஒரு­போதும் பய­னு­று­தி­யு­டை­ய­தா­கவும்  அர்த்­த­மற்­ற­­தா­கவும் இருந்­த­தில்லை என்று  யுனெஸ்கோ பணிப்­பாளர் நாயகம் நீண்­ட­தொரு  அறிக்­கையில் தெரி­வித்­தி­ருக்­கிறார். 

அமெ­ரிக்க மக்­களின் பண்பு விழு­மி­யங்­க­ளுக்கு  இசை­வா­ன­தா­கவே யுனெஸ்­கோவின் இலக்­கு­களும்  செயற்­பா­டு­களும் அமைந்­தி­ருக்­கின்­றன. பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு மத்­தி­யிலும், மனித குலத்­துக்கு  பொது­வா­ன­தாக இருக்கும் கலா­சாரப் பாரம்­ப­ரி­யங்­களைப் பாது­காக்கும் கல்வி மற்றும் ஊடகப் போதனை மூல­மாக  வன்­முறைத் தீவி­ர­வா­தத்தைத் தடுப்­ப­திலும் நாம் இணைந்து செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்றோம். அதன் கார­ணத்­தி­னால்தான் எமது அமைப்­பி­லி­ருந்து வெளி­யே­று­வ­தென்ற அமெ­ரிக்காவின் முடிவு கவலை தரு­கி­றது என்று தனது அறிக்­கையில் தெரி­வித்­தி­ருக்கும் பொகோவா, யூத இனத்­த­வர்களின் உணர்­வு­க­ளுக்கு எதி­ரான  போராட்­டத்தில் யுனெஸ்கோ முன்­னெ­டுத்து வந்­தி­ருக்கும் செயற்­பா­டு­களைப் பட்­டி­ய­லிட்டு இருக்­கிறார். 

சோவியத் யூனி­ய­னுக்குச் சார்­பாக செயற்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்டி அமெ­ரிக்கா றொனால்ட் றேகன்  ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த போது 1984 ஆம் ஆண்­டிலும் யுனெஸ்­கோவில் இருந்து முன்னர் வெளி­யே­றி­யி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது. 2002 இல் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஜனாதிபதியாக இருந்த வேளையில் அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்து கொண்டது. 

யுனெஸ்கோவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான  உறவுகள் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றன. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் கலாசார பாரம்பரியம் தொடர்பில் யூதர்களின் கருத்துக்களை யுனெஸ்கோ அலட்சியம் செய்கிறதென்று குற்றஞ்சாட்டி இஸ்ரேல் 2016 ஆம் ஆண்டில் அந்த அமைப்புக்கான தனது தூதுவரை  வாபஸ் பெற்றுக்கொண்டமை கவனிக்கத்தக்கது.