சீனாவில் உருவாக்கப்பட்ட மனித உருவ ரோபோ ஒன்று 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 9.39 வினாடிகளில் நிறைவு செய்து, உலகின் அதிவேக ஓட்ட வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் உலக சாதனையை, வேகமாக ஓடி முறியடித்துள்ளது. ஓட்டப் பந்தய வீரராக தடம் பதித்துள்ள ஒரு மனிதனையை சாதனையை, ஒரு ரோபோ முறியடித்து சாதனை படைத்துவிட்டதாக தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பெய்ஜிங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்ற World Humanoid Robot Games போட்டியின் ஆரம்ப சுற்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Tiangong Ultra எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மனித உருவ ரோபோ, Beijing Humanoid Robot Innovation Center நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. போட்டியின் இரண்டாவது பகுதியில் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற Tiangong Ultra, தனது சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜமைக்காவின் முன்னாள் தடகள நட்சத்திரமான உசைன் போல்ட் (Usain Bolt), 2009ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் நிறைவு செய்து உலக சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில், Tiangong Ultra பதிவு செய்துள்ள 9.39 விநாடிகள் என்ற நேரம், போல்ட்டின் மனிதர்களுக்கான உலக சாதனை நேரத்தை விட 0.19 விநாடிகள் குறைவாகும்.
எனினும், இது மனிதர்களுக்கான தடகள உலக சாதனையுடன் நேரடியாக ஒப்பிடக்கூடிய அதிகாரபூர்வ மனிதப் போட்டி சாதனை அல்ல. ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
மனித உருவ ரோபோக்களின் ஓட்டம், சமநிலை மற்றும் இயக்கத் திறன்களில் சீனா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் வேகமான தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்தப் போட்டிகள் வெளிப்படுத்துகின்றன.
செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளின் வளர்ச்சியுடன், எதிர்காலத்தில் மனிதர்களைப் போன்ற இயக்கங்களை மேற்கொள்ளும் திறன் கொண்ட ரோபோக்கள் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM