பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்துச் செய்­வ­தற்­கான மத்­திய வங்­கியின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு எதிர்­வரும் 19 ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மைக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ்  நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­களை நிறுத்தும் முக­மாக அந்­நி­று­வ­னத்தின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை உட­ன­டி­யாக இரத்து செய்­வ­தாக இலங்கை மத்திய வங்கி தீர்­மானம் எடுத்­தி­ருந்­தது. இதனை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வகை­யி­ல் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ்  நிறு­வனம் அடிப்­படை உரிமை மனுவை தாக்கல் செய்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் நேற்று வெள்ளிக்­கி­ழமை குறித்த மனு  விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது மனுவின் பிர­தி­வா­திகள் இரண்டு பேரின் பத­வி­களில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளதால் அந்த விடயம் தொடர்பில் திருத்­தங்­களை சமர்­ப்பிக்க காலம் தேவை என்று பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதி­மன்றம் எதிர்­வரும் 19 ஆம் திக­திக்கு விசா­ர­ணையை  ஒத்­தி­வைக்க  தீர்­மா­னித்­தது.

மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி தொடர்­பான சர்ச்­சைகள் எழுந்த நிலையில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அது குறித்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. குறித்த ஆணைக்­கு­ழுவில் இது­வரை அளிக்­கப்­பட்ட சாட்­சி­களின் பிர­காரம் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ்  நிறு­வனம் தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதனைத் தொடர்ந்து இலங்கை மத்­திய வங்­கி­யினால் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த அனு­மதிப் பத்­தி­ரத்தை இரத்து செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தது.

அத்­தீர்­மா­னத்­தினை  சவா­லுக்கு உட்­ப­டுத்தும் வகையில் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­மா­னது, மத்­திய வங்­கி­யினால் முறை­யான விசா­ர­ணைகள் எதுவும் மேற்­கொள்­ளப்­ப­டாமல் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்து செய்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் தீர்­மானம் மூலம் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாரிய பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

இதன்­ கா­ர­ண­மாக மத்­திய வங்­கியின் நட­வ­டிக்­கை­யினால் தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்டுள்­ ளது. தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனும திப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு மத்திய வங்கி எடுத்திருக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.