உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சி யல் கைதிகள் மிகவும் சோர்­வ­டைந்த நிலையில் காணப்­ப­டு­கின்­றனர் என வவு­னியா மாவட்ட சிரேஷ்ட சட்­டத்­த­ரணி பி.அன்ரன் புனி­த நா­யகம் தெரி­வித்­துள்ளார்.

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதி­களை நேற்றுப் பார்­வை­யிட்­டதன் பின்னர் வவு­னி­யா­வி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற விசேட ஊடக சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த அவர்,

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தங்கள் வழக்­கு­களை வவு­னியா நீதி­மன்­றுக்கு மாற்­று­மாறு கோரி உண்­ணா­வி­ரதம் இருக்கும் இராச­துரை திரு­வருள், மதி­ய­ரசன் துலக் ஷன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கடந்த 25-.09.-2017 தொடக்கம் உண்­ணா­வி­ரதம் மேற்­கொண்­டுள்ள அர­சி யல் கைதி­களின் நிலைமை மோச­ம­டைந்து உடல் சோர்­வுற்ற நிலையில் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களுக்கு சிறை அதி­கா­ரிகள் உடலில் 'சேலைன்' ஏற்­றி­வ­ரு­கின்­றனர். 

இவர்கள் மூவரும் 18.-05.-2009 அன்று கைதுசெய்­யப்­பட்டு பல்­வேறு இடங்­களில் தடுத்து வைக்­கப்­பட்ட நிலையில் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் 2013-.07.-15 வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ரணை நடை­பெற்று வந்தது. இந் நிலையில் அரச சட்­டத்­த­ரணி சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு இல்லை என தெரி­வித்து வழக்கை அநு­ரா­த­புரம் விசேட மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­று­மாறு கோரிக்கை விடுத்­த­போதும் வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி அரச சட்­டத்­த­ர­ணியின் கோரிக்­கையை ஏற்­கவில்லை. சாட்­சி­க­ளுக்கு அழைப்­பாணை வழங்­கப்­பட்டு வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் வழக்கு நடை­பெற்று வந்­தது.

இந்­த­ நி­லையில் சட்ட மா அதி­ப­ ரினால் அர­சியல் கைதி­களின் வழக்­கா­னது திடீ­ரென அநுரா­த­புரம் விசேட மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளது. 

அநுரா­த­புரம் நீதி­மன்­றத்தில் தங்­க­ளுக்கு மொழிப்­பி­ரச்­சினை உண்டு. சிங்­கள மொழி பேசும் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு அர­சியல் கைதிகள் கூறும் விடயம் விளங்­கு­வ­தில்லை. அத்­துடன் பெற்­றோர் அவர்­க­ளுடன் தொடர்­பா­டலை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது. 

இப்­போது நாட்­டிலே அமைதி நில­வு­கின்ற நிலையில் தாங்கள் ஒரு தமிழ்­மொழி தெரிந்த நீதி­ப­தியின் முன் தங்கள் வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­ட­ வேண்டும், அது வவு­னியா மேல் நீதி­மன்றம் அல்­லது யாழ்.மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட வேண்டும் என உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதிகள் தெரி­வித்­துள்­ளனர். 

தங்­களை பார்­வை­யிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனா­தி­ராஜா, சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் மாகா­ண ­சபை உறுப்­பி­னர்­க­ளான சிவா­ஜி­லிங்கம், சிவ­ஞானம், அனந்தி சசி­தரன், ப.சத்­தி­ய­லிங்கம்.தவ­நாதன் ஆகியோர் வாக்­கு­று­தி­களை மாத்­திரம் வழங்­கி­விட்டு சென்­றுள்­ள­தா­கவும் அர­சியல் கைதிகள் தெரி­விக்கின்றனர்.

மேலும் பாரா­ளு­மன்­றத்தின் குழுக்­களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் அவர்­க­ளுக்கு எதி­ரான வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு அநு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றிய போது அதனை தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தால் தங்­க­ளு­டைய வழக்கு அநு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டி­ருக்­காது என்ற ஆதங்­கத்தை சிறைக்­கை­திகள் வெளிப்­ப­டுத்­துகின்றனர்.

வவுனியா அல்லது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு தங்கள் வழக் குகள் மாற்றப்படும் வரை உண் ணாவிரதப் போராட்டம் தொடரும் என்பதுடன் சிறையில் உண்ணாவிர தம் இருக்கும் அரசியல் கைதிகளு க்கு ஆதரவு வழங்கும் அனைவருக் கும் உண்ணாவிரதிகள் நன்றி தெரி வித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.