உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய

Published By: Priyatharshan

14 Oct, 2017 | 09:24 AM
image

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தும் சகல நகர்­வு­களும் உரிய அமைச்­சரின் கைக­ளி­லேயே உள்­ளது. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை மாந­கர, நகர , பிர­தே­ச­சபை திருத்­தச்­சட்டம் வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு விடப்­படும் என  நம்­பு­வ­தாக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

19 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள தேர்தல் ஆணைக்­கு­ழுவின்  கூட்­டத்தின் பின்னர் வேட்­பு­மனு தாக்கல் மற்றும் தேர்தல் திக­திகள் வெளி­யி­டப்­படும் எனவும் அவர்  குறிப்­பிட்டார். 

மாந­கர, நகர, பிர­தே­சபை திருத்­தச்­சட்ட பிர­தி­களை  நேற்று மாகா­ண­சபை மற்றும் உள்­ளூ­ராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்­தபா தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­விடம் கைய­ளித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­களை சந்­தித்த ஆணைக்­குழு தலைவர் இக் கருத்­தினை தெரி­வித்தார். 

அவர் மேலும் கூறு­கையில், 

தேர்தல் சட்­ட­மூ­லத்­தினை வெளிப்­ப­டுத்­து­வது அமைச்­சரின் கட­மை­யாகும். எமக்கு கார­ணி­களை தெரிந்­து­கொள்­ளவே இன்று சட்­ட­மூல பிரதி கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சட்­ட­மூலம் தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்­தலை வரு­கின்ற வாரம் செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டுவார் என நாம் நம்­பு­கின்றோம். அவ்­வாறு வெளி­யிட்டால் எதிர்­வரும் 19 ஆம் திகதி எமது தேர்தல் திணைக்­கள கூட்­டத்தின் போது வேட்­பு­மனு தாக்கல் தொடர்­பான அறி­வித்­தலை  எப்­போது அறி­விப்­பது என்­பது குறித்து  தீர்­மானம் ஒன்­றினை எடுக்க முடியும்.

வாக்­காளர் பெயர் பட்­டி­யலை நேற்­றைய தினத்­துடன் நாம் பூர­ணப்­ப­டுத்­தி­யுள்ளோம். ஒவ்­வொரு பிர­தேச சபை­க­ளுக்­கு­மான  பெயர் பட்­டி­யலை ஒதுக்கும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க ஒரு வார­காலம் தேவைப்­படும். ஆகவே இந்த மாத இறு­திக்கு  முன்னர் வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட வேண்டும். அவ்­வாறு  வெளி­யி­டப்­படும் என நாம் நம்­பு­கின்றோம். ஆனால் என்னால் வாக்­கு­றுதி வழங்க முடி­யாது . ஆணைக்­கு­ழுவின் கூட்­டத்தின் போதே நாம் தீர்­மானம் எடுக்க வேண்டும். 

எவ்­வாறு இருப்­பினும் அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை  நடத்த முடியும் என நாம் நம்­பு­கின்றோம். அதற்கு முன்னர்  தேர்­தலை நடத்த முடி­யாது என்ற ஒரு பிரச்­சினை உள்­ளது. பாட­சாலை பரீட்­சை­களை குழப்ப முடி­யாது. ஆகவே டிசம்பர் 21 ஆம் திகதி வரையில் எம்மால் தேர்­தலை நடத்த இய­லாது. விரைவில் தேர்­தலை நடத்த வேண்டும் என்­ப­தையே நாமும் எதிர்­பார்க்­கின்றோம். நாம் தேர்­த­லுக்கு தடை­யில்லை , எனினும் இப்­போது தேர்தல் நடத்­து­வதா  தள்­ளிப்­போ­டு­வதா என்­பதை அமைச்­சரே தீர்­மா­னிக்க வேண்டும். பந்து அவரின் கையில் உள்­ளது. 17 ஆம் திகதி எம்­மிடம் ஒப்­ப­டைப்பார் என நாம் நம்­பு­கின்றோம். 

எம்­மு­ட­னான சந்­திப்பின் போதும் அவர் இந்த வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ளார். ஆகவே சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். எனினும் நான்கு பிர­தேச சபைகள் இன்னும் சிக்­கலில் உள்­ளன. புதுக்­கு­டி­யி­ருப்பு மற்றும் கரைச்சி பிர­தேச சபை­க­ளுக்கு தேர்தல் நடத்­தப்­பட வேண்டும் என்றே  சட்­ட­மூ­லத்தில் உள்­ளது.   2011 ஆம் ஆண்டு பெயர் பட்­டி­யலின் அடிப்­ப­டையில் தேர்­தலை நடத்த வேண்டும் எனவும் சுட்­டிக்க்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதனை நீக்கும் வர்த்­த­மானி அறி­வித்தல் பாரா­ளு­மன்­றத்தில் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ் விட­யத்­துக்கு  தீர்வு கண்ட பின்­னரே  அவற்றில் திருத்­தங்­களை கொண்­டு­வர முடியும். அதேபோல் நுவ­ரெ­லியா மற்றும் அம்­ப­க­முவ ஆகிய இரண்டும் பிர­தேச சபை­க­ளையும்   நான்கு பிர­தேச சபை­க­ளாக மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது.

இவற்­றினை சரி­வர செய்ய முடி­யு­மாயின் அவற்­றையும் சட்­ட­மூ­லத்தில் இணைத்­துக்­கொண்டு செயற்பட முடியும்.  தேர்தல் குறித்த அறிவித்தலை  75-60 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும். ஆகவே வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர்  19 ஆம் திகதி எமது திணைக்கள கூட்டத்தில் எப்போது வேட்புமனு தாக்கல் அறிவித்தல் விடுவது மற்றும் தேர்தல் வாக்கெடுப்பை  எப்போது நடத்துவது என்பதை தீர்மானிக்க முடியும்  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58