ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்தும் வகையில் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஒன்று கூடுமாறு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பொது அமைப்புக்களினால் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் தொடர்ச்சியான பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மூன்று தமிழ் அரசியல் கைதிகளினால் 18 ஆவது நாளாக தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர்களின் கோரிக்கையை நிவர்த்திசெய்யக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற வேளையில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமையினை எதிர்க்கும் வகையிலேயே இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM