கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

23 Aug, 2026 | 12:19 PM
image

நாட்டில் மீண்டும் புலி­களின் மீள் உரு­வாக்கம் தொடர்­பி­லான புனைக்­க­தை­களைக் கூறி பதற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு சில குழுக்கள் முயற்­சிக்­கின்­ற­னவா என்ற சந்­தேகம் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் கொழும்பில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் புதி­தாக முளைத்­துள்ள அமைப்­பொன்றின் பிர­தி­நிதி தெரி­வித்த கருத்தும் அதற்கு அர­சாங்கத் தரப்பில் வழங்­கப்­பட்­டுள்ள பதிலும் பல்­வேறு சந்­தே­கங்­களை உரு­வாக்கும் வகையில் அமைந்­துள்­ளன.

கண்­டங்­க­ளுக்­கி­டை­யே­யான மனித உரி­மைகள் ஆணை­ய­கத்தின் (அரச சாரா அமைப்பு) நிறை­வேற்றுப் பணிப்­பாளர் என்ற பெயரில் சங்கீத் டயஸ் சேகர என்­பவர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்­தி­யி­ருந்தார்.

பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபைக்­குட்­பட்ட பளை பகு­தியில் அமைந்­துள்ள அரச காப்­பக நிலத்தில் எவ்­வித அனு­ம­தி­யு­மின்றி சட்­ட­வி­ரோத கட்­டு­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், இது தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் பயிற்சிக் முகா­மொன்றை அல்­லது வெடி­பொ­ருட்­களை உற்­பத்தி செய்யும் கூடத்தை உரு­வாக்கும் திட்­டமா என்ற பலத்த சந்­தேகம் எழுந்­துள்­ள­தா­கவும் அவர் குற்றம் சாட்­டி­யி­ருந்தார்.

 இது தொடர்­பாக உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி நாட்டின் உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளுக்கு எழுத்­து­மூல ஆவ­ணங்கள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

‘பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபைக்­குட்­பட்ட பளை பகு­தியில் அமைந்­துள்ள அரச காப்­ப­கத்­துக்குச் சொந்­த­மான சுமார் 49 ஏக்கர் நிலப்­ப­ரப்பு சட்­ட­வி­ரோ­த­மான முறையில் துப்­பு­ரவு செய்­யப்­பட்டு, மத்­திய அரசோ அல்­லது உள்­ளூ­ராட்சி அமைப்­பு­களோ அறி­யாமல் எவ்­வித அனு­மதிப் பத்­தி­ரங்­க­ளு­மின்றி மூன்று மாடி கொங்­கிரீட் கட்­ட­ட­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இங்கு தினமும் 100 முதல் 150 வரை­யி­லான நபர்கள் பணிக்கு வருகை தரு­கின்­றனர்.

இந்தத் திட்­டத்தின் பின்­ன­ணியில் அரச உயர் மட்­டத்தைச் சேர்ந்த சிலர் உள்­ள­தா­கவும், இது ஒரு வெளி­நாட்டு உதவித் திட்­ட­மாக ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன. எவ்­வித சூழ­லியல் அல்­லது பிர­தேச சபையின் கட்­டிட அனு­ம­தி­யு­மின்றி இவ்­வ­ளவு பெரிய கட்­டு­மா­னங்கள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன என்­பது தீவிர சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

நாட்டின் பாது­காப்பைக் கருத்தில் கொண்டு இந்த விவ­காரம் குறித்து பாது­காப்பு அமைச்சு உட­ன­டி­யாக விரி­வான விசா­ர­ணை­களை நடத்த வேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

இந்த அநா­ம­தேய அமைப்பின் குற்­றச்­சாட்டு தொடர்பில் அர­சாங்கத் தரப்பில் பிரதிப் பாது­காப்பு அமைச்சர் அருண ஜய­சே­கர கருத்து தெரி­வித்­தி­ருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

குறித்த விடயம் சம்­பந்­த­மாக கருத்து தெரி­வித்த பிரதி பாது­காப்பு அமைச்சர் அருண ஜய­சே­கர, ‘பளை பிர­தே­சத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிர்­மாணம் தொடர்பில் எமக்கு தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. அத­னை­ய­டுத்து பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­சுடன் இணைந்து அது தொடர்பில் விசேட கவனம் செலுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த விடயம் தொடர்பில் தற்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதி­கா­ரிகள் நேர­டி­யாக சென்று அந்த நிர்­மானம் தொடர்­பி­லான மேல­திக தக­வல்­களை பெற்றுக் கொள்­ள­வுள்­ளனர்’ என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

கிளி­நொச்சி மாவட்டம், பச்­சி­ளைப்­பள்ளி பிர­தே­சத்­துக்­குட்­பட்ட பளை பகு­தியில் புதி­தாக கட்­டு­மானம் கட்­டப்­ப­டு­கின்­றமை தொடர்பில், ‘கண்­டங்­க­ளுக்­கி­டை­யே­யான மனித உரி­மைகள் ஆணையம்’ என்ற அமைப்பின் சார்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வுடன் அது குறித்து விசா­ரணை இடம்­பெ­று­வ­தாக பிரதிப் பாது­காப்பு அமைச்சர் கூறி­யுள்­ள­மையை சிறு­பிள்­ளைத்­த­ன­மான செயற்­பா­டா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

பளைப் பகு­தியில் 49 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் அனு­மதி பெறப்­ப­டாது மூன்று மாடி கட்­டடம் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இங்கு தினமும் 100 முதல் 150 வரை­யி­லான நபர்கள் பணிக்கு வரு­வ­தா­கவும் இந்த அமைப்பு குற்­றம்­சாட்­டி­யுள்­ள­துடன் அதனை புலி­களின் பயிற்சி முகாமா அல்­லது வெடிப் பொருட்­களை உற்­பத்தி செய்யும் கூடமா என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளமை திட்­ட­மிட்ட வகையில் நாட்டில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­யா­கவே பார்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை.

தற்­போது தெற்கில் பல்­வேறு படு­கொலை சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. பாதாள உலகக் குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் என்று கூறி இதனை நியா­யப்­ப­டுத்தி வரும் அர­சாங்­க­மா­னது பளையில் கட்­டடம் ஒன்று கட்­டப்­ப­டு­கின்­றது, அதில் விடு­தலைப் புலி­களின் மீளு­ரு­வாக்கம் இடம்­பெ­று­கின்­றதோ என்று ஓர் அமைப்பு குற்­றம்­சாட்­டி­ய­துடன் அது குறித்து விசா­ரிப்­ப­தாக கூறு­வது வேடிக்­கை­யான விட­ய­மா­க­வுள்­ளவே உள்­ளது.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இத்­த­கைய புலி­களின் மீளு­ரு­வாக்கம் என்ற கட்­டுக்­கதைகள் பரப்­பப்­பட்டு வந்­தன. தேர்தல் காலங்­களில் தெற்கின் அர­சியல் கட்­சிகள் தமது சுய­நல அர­சி­ய­லுக்­காக இத்­த­கைய புலி மீளு­ரு­வாக்க கதை­களை கூறி வந்­தி­ருந்­தன.

மீண்டும் புலிகள் உரு­வா­கின்­றார்கள், புலம்­பெ­யர்ந்த மக்கள் இதற்கு உத­வு­கின்­றார்கள், இதனால் நாட்டில் பாது­காப்பை கருத்­தில்­கொண்டு சிங்­கள மக்கள் எம்மை ஆத­ரிக்க வேண்டும் என்று பல இன­வாத கட்­சிகள் தேர்தல் காலங்­களில் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­டி­ருந்­தன.

தற்­போது தேர்தல் கால­மாக இல்­லாத போதிலும் மீண்டும் நாட்டில் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி இனங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தை உரு­வாக்கும் வகையில் சில சக்­திகள் செயற்­ப­டு­கின்­ற­னவா என்ற சந்­தே­கத்தை தற்­போ­தைய ‘புலி­களின் மீள் உரு­வாக்கக் கதை’ ஏற்­ப­டுத்­து­கின்­றது.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் தமிழ் இளைஞர், யுவ­தி­களின் உணர்­வு­களை மழுங்­க­டிக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வந்­தி­ருந்­தன. அதில் ஓரங்­க­மா­கவே வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் போதை­வஸ்து கலா­சாரம் பரப்­பப்­பட்­டி­ருந்­தது.  தற்­போது கூட அத்­த­கைய செயற்­பாடு அங்கு இடம்­பெற்றே வரு­கின்­றது.நாட்டில் இடம்­பெற்ற கொடூர யுத்­தத்­தினால் தமிழ் மக்கள் பேர­ழி­வு­களை சந்­தித்­தி­ருந்­தனர். இறு­தி­யுத்­தத்தின் போது தமிழ் மக்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் கொன்று குவிக்­கப்­பட்­டி­ருந்­தனர். பெரும் யுத்தக் குற்­றங்கள் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாறு பேரி­ழப்­பு­களை சந்­தித்த தமிழ் மக்கள் தற்­போது அந்த அனர்த்­தங்­களின் வடுக்­க­ளி­லி­ருந்து மீண்டு வரும் நிலையில் மீண்டும் பதற்­றத்தை உரு­வாக்­கு­வ­தற்கு செயற்­படும் சக்­தி­க­ளுக்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது.

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­கா­ணப்­படும் என்று உறுதி வழங்­கி­யி­ருந்­தது. ஆனால், ஆட்­சிக்கு வந்து 2 வரு­டங்­க­ளா­கின்ற போதிலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்­திக்கு பேரா­த­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். கடந்த கால அர­சாங்கங்­களை விடவும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் உரு­வானால் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­படும் என்று தமிழ் மக்கள் நம்­பி­யி­ருந்­தனர். அத­னால்தான் தேசிய மக்கள் சக்தியை அந்த மக்கள் ஆதரித்திருந்தனர்.

ஆனால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் அரசாங்கம் தீர்வுகாண முயலவில்லை. வெறும் சாக்குபோக்குகளைக் கூறி காலத்தைக் கடத்தும் செயற்பாடே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்த சூழ்நிலையில் மீண்டும் வடக்கு, கிழக்கில் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதாகவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி தெற்கில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.

இத்தகைய முயற்சிகள் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கி மீண்டும் குரோத நிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்.எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இத்தகைய பதற்றத்தை உருவாக்கும் அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. இத்தகைய அமைப்புகளின் கட்டுக்கதைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துமா ஐ.நா. மனித உரி­மைகள்...

2026-09-06 15:44:48
news-image

உண்மைகளை தொடர்ந்து மறைத்து வைக்கக் கூடாது

2026-08-30 14:09:47
news-image

கட்டுக்கதைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது

2026-08-23 12:19:51
news-image

அரசியல் தீர்வை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்காதது...

2026-08-16 08:35:16
news-image

இந்தியாவின் வலியுறுத்தலும் இலங்கையின் யதார்த்த நிலையும்

2026-08-09 15:54:39
news-image

அரசியல் தீர்வு குறித்த சசி தரூரின்...

2026-08-02 10:05:20
news-image

கறுப்பு ஜூலை கலவரமும் எடுக்க வேண்டிய...

2026-07-26 15:26:43
news-image

தமிழ்ப் பேசும் கட்சிகளின் உடன்பாடு வரவேற்கத்தக்கது

2026-07-19 12:18:55
news-image

தமிழகக் கட்சிகளை ஓரணியில் திரட்ட முன்னர்...

2026-07-12 10:38:29
news-image

அரசியல் தீர்வு விவகாரத்தில் ஒன்றிணைந்த செயற்பாடு...

2026-07-05 10:20:30
news-image

செம்­மணி மனித புதை­குழி விவ­கா­ரத்தில் உண்­மைகள்...

2026-06-28 12:11:15
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நல்லதொரு வாய்ப்பு

2026-06-21 14:25:13