இளம் திறமைகளை ஊக்குவித்தல், கூடைப்பந்தாட்டத்தில் அதிகளவான பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் இலங்கை விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு ஆதரவளித்தல் ஆகிய நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் 2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு மக்கள் வங்கி அனுசரணையாளராக முன்வந்துள்ளது.
இந்த அனுசரணைத் திட்டத்தின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பு 02, பீப்பள்ஸ் டவர்ஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மக்கள் வங்கிக்கும் இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சியின் கீழ், 2026ஆம் ஆண்டில் 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் ஆகிய பிரிவுகளுக்கு மக்கள் வங்கி அனுசரணை வழங்கவுள்ளது.
இதன் மூலம் வளர்ந்து வரும் கூடைப்பந்தாட்டத் திறமைகளை மேம்படுத்துவதுடன், இளம் விளையாட்டு வீரர்களுக்கு போட்டிமிக்க விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான அதிக வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இந்த அனுசரணைக்கு மேலதிகமாக, பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்டத்தைப் பிரபலப்படுத்துவதையும், இவ்விளையாட்டில் அதிகளவான பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பிரத்தியேக தகவல் தொடர்புத் திட்டத்தையும் மக்கள் வங்கி முன்னெடுக்கவுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், அதிகளவான இளைஞர்களை கூடைப்பந்தாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதுடன், ஒழுக்கம், குழுப்பணி, தலைமைத்துவம், விடாமுயற்சி மற்றும் சிறப்பை நோக்கிய அர்ப்பணிப்பு போன்ற முக்கியமான பண்புகளை வளர்ப்பதையும் மக்கள் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் நாடளாவிய ரீதியில் 120க்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கேற்கின்றன. இதில் நாட்டின் முன்னணி தேசிய, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் பலவும் உள்ளடங்குகின்றன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளைக் கொண்ட இச்சாம்பியன்ஷிப், இளம் விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான போட்டிமிக்க தளத்தை வழங்குவதுடன், இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் கூடைப்பந்தாட்டத்தை ஊக்குவிக்கிறது.
இம்முறை போட்டியில் சுமார் 80 ஆண்கள் அணிகளும் 50 பெண்கள் அணிகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 1,950 மாணவ விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த குறிப்பிடத்தக்க பங்கேற்பானது, இலங்கை பாடசாலை மாணவர்களிடையே கூடைப்பந்தாட்டம் பிரபல்யம் அடைந்துக்கொண்டிருப்பதையும், பாடசாலை மட்ட விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான மற்றும் ஆரம்பக் கல்வி அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் P.சு. கரியவசம், மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி , பொது முகாமையாளர் க்ளைவ் பொன்சேகா, இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் இரான் சம்பிக சில்வா, மக்கள் வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ உறுப்பினர்கள், முன்னாள் தேசிய வீரர்கள் மற்றும் அணித் தலைவர்கள் உள்ளிட்ட இலங்கை கூடைப்பந்தாட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
2026 இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம், இளம் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டில் சுறுசுறுப்பான பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும், இலங்கைக்கு வலுவானதும் சிறப்புமிக்கதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் தனது உறுதிப்பாட்டை மக்கள் வங்கி தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM