இலங்கைக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஒரு நாள் போட்டியில், இலங்கை அணிக்கு 293 ஓட்டங்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்களை இழந்த பாகிஸ்தான் அணி 292 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது விக்கட்டுக்காகக் களமிறங்கிய பாபர் அஸாம் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி 103 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால் இரண்டு விக்கட்களையும், லஹிரு, அகில, திசர, ஜெஃப்ரி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் பெற்றனர்.