சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளை வைத்திருந்த  இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வௌ்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  10 கிலோ 200 கிராம் வல்லப்பட்டைகள் தம்வசம்  வைத்திருந்த வெளிநாட்டவர் மற்றும் அவருடன் இருந்த இலங்கை பிரஜையையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

42 வயதுடைய இந்தியப் பிரஜையும்  32 வயதுடைய கொழும்பு பிரதேசத்தையும்  சேர்ந்த இருவரையும்  கைது செய்ததுடன்  அவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.