(எம்.எம்.மின்ஹாஜ்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை யாழ். விஜயம் செய்கின்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு யாழ் மண்ணுக்கு ஏதுவான இலங்கையில் உற்பத்தியான எம்.ஐ ஹய்பிரிட் மிளகாய் விதைகளை பகிர்ந்தளிக்கவுள்ளார். மேலும் நாற்று நடுகை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு நவீன இயந்திரங்களை அன்பளிப்பு செய்யவுள்ளார்.

தேசிய உணவு உற்பத்தி புரட்சியின் இறுதி நிகழ்வு தொடர்பில் சேமா கட்டடத்தொகுதியில் இன்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.