வயதான தந்தையார் வீட்டிலிருக்கும் வேளை வீட்டின் யன்னலை உடைத்து துணிகரமாக தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு அமிர்தகழி, கதிர்காமத்தம்பி வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் அனவரும் வயதான தந்தையொருவரை வீட்டியில் விட்டுவிட்டு உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த வீட்டின் யன்னலை உடைத்து திருடர்கள் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளின் பெறுமதி சுமார் 5 இலட்சம் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் மறுநாள் காலை வீட்டிற்கு வந்தேபோது வீட்டின் யன்னல் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வீட்டு உரிமையாளர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்த மட்டக்களப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.