மாத்தறை காணி முறைகேடு விவகாரம்: பஷில் ராஜபக்ஷவின் பிடியாணை ஒக்டோபர் 27 வரை நீடிப்பு

Published By: Vishnu

20 Aug, 2026 | 04:20 AM
image

மாத்தறையில் காணியை முறைகேடாகப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்க மாத்தறை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாத்தறை – பிரவுன்ஷில், எலியாகந்த வீதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை முறைகேடாகப் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று  மாத்தறை பிரதான நீதவான் சதுரயா திசாநாயக்க முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைகளுக்கு தொடர்ந்து சமூகமளிக்காததுடன், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மருத்துவ அறிக்கையையும் சமர்ப்பிக்காத மூன்றாவது சந்தேகநபரான பஷில் ராஜபக்ஷ செலுத்திய பிணைப் பணத்தை பறிமுதல் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், பஷில் ராஜபக்ஷவுக்காக பிணையில் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதவான், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். அத்துடன், பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி வரை நீடிக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலின் கைது புதிய விடயமல்ல; பிணை...

2026-09-05 16:36:59
news-image

கீழ் மல்வத்து ஓயா பெயரில் குடியேற்ற...

2026-09-05 16:28:17
news-image

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு...

2026-09-05 16:13:20
news-image

கொட்டகலை பாதை அபிவிருத்தியில் ஊழல் குற்றச்சாட்டு:...

2026-09-05 15:59:49
news-image

சிறையிலுள்ள நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று...

2026-09-05 15:51:45
news-image

வென்னப்புவையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இரு...

2026-09-05 14:55:17
news-image

தெஹிவளையில் தீவைத்து நபர் படுகொலை செய்யப்பட்ட...

2026-09-05 14:34:35
news-image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டார்கள்...

2026-09-05 14:12:40
news-image

முள்ளிப்பொத்தானை புகாரி நகர் பாடசாலையில் கட்டட...

2026-09-05 14:10:50
news-image

சட்டவிரோத கடல் அட்டை ஏலம்: மன்னார்...

2026-09-05 13:52:51
news-image

நாட்டில் மின்வெட்டு இல்லை – நிலக்கரி...

2026-09-05 13:30:02
news-image

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்தியின் சில...

2026-09-05 13:21:49