(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் தனது கன்னி முயற்சியிலேயே நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பதுளை தர்மதூத்த கல்லூரியை 4 - 3 என்ற பெனல்டி முறையில் நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி 70 நிமிட முழு நேரத்தின்போது 1 - 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.
இதனை அடுத்து மத்திஸ்தரினால் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 3 - 2 என நெல்லியடி மத்திய கல்லூரி வெற்றி பெற்று சம்பியனானது.
16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டி நெஸ்ட்லே லங்கா பிஎல்சியின் மைலோ அனுசரணையுடன் நடத்தப்பட்டது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM