கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் : பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரேரணையை ஆராயக் கோரி சபாநாயகரிடம் கடிதம் கையளிப்பு!

19 Aug, 2026 | 06:35 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி எதிர்க்கட்சி முஸ்லிம் எம்.பிக்கள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம்  கோரிக்கை கடிதம் கையளித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபினால் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட, கொரோனா காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணையைப், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயும்படி கோரி 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் புதன்கிழமை (19) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித் ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து இந்தக் கோரிக்கை கடிதத்தைக் கையளித்தனர்.

முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இந்த மனித உரிமைமீறல் மற்றும் அநீதி தொடர்பில் முறையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் இக்கோரிக்கை கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுநலவாய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டித் தெரிவிலிருந்து...

2026-09-11 18:59:01
news-image

மன்னாரில் கனிம வளங்கள், வனப்பகுதி பிரச்சினைகள்...

2026-09-11 18:57:30
news-image

வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின்...

2026-09-11 18:37:52
news-image

"பசுமைப் பாதை" ; "நாட்டிற்கு ஒரு...

2026-09-11 17:38:46
news-image

முகநூல் களியாட்ட விருந்துகளைக் கண்காணிக்க விசேட...

2026-09-11 17:37:03
news-image

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட...

2026-09-11 16:39:30
news-image

வத்தேகமவில் கார் மோதி நபரொருவர் உயிரிழப்பு...

2026-09-11 16:33:19
news-image

முதலையிடம் போராடி உயிர் தப்பிய இளைஞர்:...

2026-09-11 16:20:52
news-image

செம்மணி உள்ளிட்ட அனைத்து மனித புதைகுழிகள்...

2026-09-11 16:30:28
news-image

2015 பிட்டிகல கொலை வழக்கு: குற்றவாளிக்கு...

2026-09-11 16:24:04
news-image

வற்றாப்பளை சந்தியில் இராணுவப் பயன்பாட்டிலிருந்த அர,...

2026-09-11 15:48:12
news-image

மாகாணசபைத் தேர்தல் விசேட பாராளுமன்ற செயற்குழுவின்...

2026-09-11 15:43:29