(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்படாமை தொடர்பில் கலந்துரையாட நாளை (20) வியாழக்கிழமை சட்டத்தரணிகள் சங்கத்தினர் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (18) புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை சட்டத்தரணிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் வெற்றிடம் நிலவி காணப்படும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகளை நியமிக்காமை என்பவற்றால் எழுந்துள்ள நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி பாராளுமன்றத்தில் உள்ள 225 சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவோம் என கோரப்பட்டிருந்தது
அது தொடர்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டு சபாநாயகருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், திட்டமிடப்பட்டவாறு நாளை பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.
அதனால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடியது போன்றே, இம்முறையும் சுமுகமாக கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு வருகை தருவதால், ஏனைய உறுப்பினர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தி, அவர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM